உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

71 கலைஞர் மேல் காதல் கொண்டேன் 'அந்தமானைப் பாருங்கள்' நூல் வெளியீட்டு விழா தமிழ் மக்களின் நெஞ்சச் சிறைச்சாலையில் நான் சிறைப் பட்டிருப்பதால் பேராசிரியர் தமிழ்க்குடிமகன் போன்ற தமிழ்ப் பெருங்குடி மக்களை என்றென்றும் என் நெஞ்சச் சிறைச்சாலையிலே நான் வைத்திருப்பேன் என்று இன்று (20.2.87) இங்கு 'அந்தமானைப் பாருங்கள்' என்னும் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றிய தலைவர் கலைஞர் அவர் கள் குறிப்பிட்டார்கள். தலைவர் கலைஞர் அவர்களது உரை வருமாறு: மதுரை யாதவர் கல்லூரியின் முதல்வரும் பேராசிரியர் பெருமகனும் முனைவருமான அன்புக்குரிய தமிழ்க்குடிம கன் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் அடிப்படையில் இந்த நூல் அவரால் எழுதப் பெற்று நம் அனைவருடைய இனிய வாழ்த்துக்களோடு இன்றைக்கு இந்த மன்றத்திலே வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்க்குடிமகன் அவர்களைப்பற்றி மதுரையில், ஏன் தமிழகத்தில் இனி ஒரு அறிமுகம் தேவையில்லை என்பதே என் கருத்தாகும். இந்தத் தமிழ்க்குடிமகனைப் பற்றிய அறிமு கம் தேவையில்லையென்றாலும் தமிழ்க்குடிமகன் என்றால் யார் என்று சொல்ல வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடுவதற்கு இல்லை.