________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 72 ஏனென்றால் நாங்களெல்லாம் தமிழர்கள், தமிழ்க்குடி மக்கள் என்பதை அடிக்கடி நாங்கள் உங்களுக்கு நினைவு படுத்தினால் தான் ஓகோ, அப்படியா என்று எண்ணவே தோன்றுகிறது. அத்தகைய ஒரு சூழலில் சிக்கியுள்ள இந்தத் தமிழ் நிலத்திலிருந்து சில நாட்கள் அந்தமான் தீவில் பயணம் நடாத்தி பல சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள் இவைகளில் கலந்துகொண்டு அந்தத் தீவிலே உள்ள வரலாற்றுச் சிறப்புக்குரிய பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்து அந்தத் தீவில் ஆங்காங்கு காணப்படுகிற சிறுசிறு பகுதிகளுக்கும் மிகுந்த சிரமத்துக்கிடையே பயணம் மேற்கொண்டு அங்கு வாழ்கின்ற பழைய நாகரிகத்தைக் கைவிடாத மனிதர்களையும் கைவிடாத வாய்ப்பைப் பெற்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒரு சிறிய நூலில் நமக்கெல் லாம் வழங்கியிருக்கின்றார்கள். இந்த நூலுக்கு அணிந்துரை எழுதுகின்ற வாய்ப்பினைப் பெற்றேன். அது ஒரு நல்ல வாய்ப்பு. ஏனென்றால் பலமுறை அழைத்தும்கூட அந்தமானுக்குச் செல்கின்ற அந்தச் சூழல் எனக்கு ஏற்படவில்லை. எனவே அந்தமானைப் பாருங்கள் என்ற இந்த நூல் மூலமாகவே அந்தமானைப் பார்த்துவிடலாம் என்ற முனைப் போடு எல்லாப் பக்கங்களையும் படித்து முடித்துவிட்டு அணிந்துரை எழுதியிருக்கின்றேன். 'அந்தமானைப் பாருங்கள்' என்ற இந்த நூலைப் பார்த்து விட்டு நான் அணிந்துரை எழுதவில்லை. படித்துவிட்டுத் தான் அணிந்துரை எழுதியிருக்கிறேன். அதைத்தான் இங்கு பேசிய நண்பர்கள் எல்லாம் சுட்டிக்காட்டினார்கள். இதனை வெளியிட்டிருப்பவர்கள் பாரதி பதிப்பகத்தார். அவர்கள் நம்முடைய பாராட்டுக்குரியவர்கள்.