________________
73 கலைஞர் மேல் காதல் கொண்டேன் என்னுடைய அணிந்துரையும், தமிழ்க்குடிமகன் அவர்க ளின் முன்னுரையும் 'அந்தமானைப் பாருங்கள்' என்ற 160 பக்கம் கொண்ட இந்த நூலில் ஒட்டப்பட்டிருக்கின்றன. ஒட்டப்பட்டிருக்கின்றன என்பதை வெளியீட்டாளர்தான் தெரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் இந்த நூலின் நீள அகல அமைப்புக்கும், நான் எழுதிய அணிந்துரை, தமிழ்க்கு டிமகன் எழுதிய முன்னுரையும் அச்சிடப்பட்டுள்ள பக்கங்க ளின் வேறுபாட்டையும் பார்த்தால் இது நூலோடு இணைந்து வந்தது அல்ல. ஒட்டப்பட்டது என்பது புரியும்; ஒருவேளை அவசரம் அவசரமாக மதுரையில் நூலை வெளியிட வேண்டும் என்பதற்காக இதை ஒட்டியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அல்லது பாரதி பதிப்பகத்தினர் எங்களோடு ஒட்டியிருப்பவர்கள் என்ற காரணத்தால் இதை அவசரமாக அச்சியற்றி இந்த நூலுடன் ஒட்டியிருப்பார்கள் என்றும் கருதுகிறேன். பெரியாரின் கொள்கையும் அண்ணாவின் தமிழுமே எனது வெற்றிக்கு அடித்தளம் நான் ஒரு எழுத்தாளன். தென்னரசு இங்கே மிகைப்ப டுத்தி எழுத்தாளனுக்கெல்லாம் எழுத்தாளர் என்றெல்லாம் சொன்னார். நான் அடக்க உணர்வின் காரணமாக அல்ல; உண்மையிலேயே அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இருந்தாலும் கூட நான் எழுத்தாளனாக விரும்பி அந்த முயற்சியிலே ஈடுபட்டு கட்டுரை கதைகளை எழுதி புதினங்களைத் தீட்டி, நாடகங்களை வரைந்து திரைப்படத் துறையிலும் ஈடுபட்டு என் எழுத்துக்களின் மூலம் தமிழ் மக்களைச் சந்தித்த நேரத்தில் நான் அதிலே வெற்றி பெற்றி ருப்பேனேயானால் அதற்கு அடித்தளமாக அமைந்தது தந்தை பெரியார் அவர்களின் கொள்கையும் பேறிஞர் அண்ணா தந்த தமிழும்தான் என்பதை எடுத்துக்காட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.