உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 74 நான் எழுதி நானே நடித்த நாகை திராவிடர் கழகத்தின் நாடகம் ஒன்று புதுவை மாநிலத்தில் நடந்தபோது ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக பெரும் கலவரத்திற்கு நாங்களெல் லாம் ஈடு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் தன் கரங்களால் மருந்து தடவி நீ என்னோடு குடியரசு அலுவலகத் திற்கு வந்துவிடு என்று அழைத்துச் சென்றார். நான் குடியரசு அலுவலகத்தில் துணை ஆசிரியராக திங்கள் ஒன்றுக்கு நாற் பது வெண்பொற்காசுகள் ஊதியமாகப் பெற்று வந்தேன். அப்போது நான் முதன் முதலாக அங்கே கற்றுக்கொண்ட பாடம் - நான் எழுத்தாளன் என்றாலும்கூட பிழை திருத்துவ தில் மிகவும் திறமையானவன் என்ற பட்டத்தைத் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து பெற்றேன். பெரியார் அவர்களின் எழுத்துக்களைப் படித்து அதை அச்சுக் கோப்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல. தமிழில் தான் எழுதுவார் என்றாலும் கூட தமிழ் எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து பிணைந்து கோடுகள் மாதிரித் தான் தெரியும். அதனை அச்சுக்கோப்பதற்கு என்றே குடியரசு அலுவலகத்தில் ஆற்றல் மிக்கவர்கள் இருந்தார்கள். அச்சுக் கோத்ததும் அய்யா அவர்களின் எழுத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து சரியாக இருக்கிறதா என்று பிழைதிருத்துகிற பணி மிகப் பெரும் பணியாகும். அந்தப் பணியிலே ஈடுபட்டிருந்த மூன்று நான்கு பேரில் நான் ஒருவன், ஒரு நூலானாலும் துண்டு அறிக்கையானாலும் சுவரொட்டியானாலும் அல்லது பத்திரிகையானாலும் என் கையில் தந்தவுடன் முதலில் அதில் என்ன பிழை இருக்கிறது என்பது என் கண்களில் பட்டுவிடும்! அதனால் என்னுடைய ஆசிரியர் பணியின் தொடக்கமே பிழைதிருத்துகின்ற பணியாக இருந்த காரணத்தால் என்ன பிழை இருக்கிறது என்றுதான் பார்க்கத்தோன்றும். இப்பொ