உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 76 இந்த ப், க் இல்லாமல் போய்விட்டால் உப்பில்லாத பண்ட மாக ஆகிவிடும் தமிழ்மொழி என்பதற்காகத்தான் ஒன்று இரண்டு பிழைகள் இருந்தாலும்கூட அதையும் நேராதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதுவும் ஒரு பேராசிரியப் பெருமகன் எழுதிய நூலில் இந்தச் சிறு பிழைகளும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் முதலில் குறைகளைச் சொல்கி றேன். இவை குற்றங்கள் அல்ல. குறைகள்தான். குற்றம் வேறு; குறைகள் வேறு. அதை வேறுபடுத்திப் பார்த்தால் தான் தெரியும். கள் எழில்வாய்ந்த அட்டையோடு அருமையான கருத்துக் அடங்கிய நிலையிலும் ஒரு நூல் நம்முடைய கரங்களில் தவழ விடப்பட்டிருக்கிறது. தமிழ்க்குடிமகன் குறிப்பிட்டதைப் போல இந்தி ஆதிக்க அறப்போராட்டத்திற்கு முன்பு என்னிடத்தில் இந்த நூலைத் தந்து அணிந்துரை வழங்கக்கேட்டு நானும் அணிந்துரை எழுதி அனுப்பினாலும்கூட இந்த நூலின் மற்றொரு பிர தியை நான் சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்று மீண்டும் ஒருமுறை படித்தேன். அந்தமான் சிறைக்கொடுமை! படித்து முடித்த பிறகு சிறைச்சாலையில் அந்தமான் தீவில் ஆங்கிலேயர் காலத்திலும், அதற்குப் பிறகு ஜப்பா னும் சில நாட்கள் அந்தமானை ஆதிக்கம் செலுத்துகின்ற அளவிற்குப் போரில் வெற்றி பெற்ற அந்த காலகட்டத்தி லும், அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வந்து இறங்கு கின்ற வரையிலே அந்த அந்தமான் சிறை எந்த அளவிற்குக் கொடுமைக் கூடாரமாக இருந்தது என்கின்ற கால கட்டம் வரையில் நமது தமிழ்க்குடிமகன் எழுதியிருக்கின்ற அந்த வாசங்களைப் பார்க்கும்போது வீரசவர்க்கார் எப்படி அடைக் கப்பட்டிருந்தார் அவர் அடைக்கப்பட்டிருந்த தனிமைச் சிறையிலிருந்து அவர் உலாவலாம் என்பதற்கு ஒதுக்கப்பட்ட