உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

77 கலைஞர் மேல் காதல் கொண்டேன் டத்திலிருந்து அவரால் இயற்கைக் காட்சிகளைக் காண முடியுமா? கடற்கரையைக் காண முடியுமா? அல்லது உல் லாச விளையாட்டுகளைப் பார்க்க முடியுமா? தொழுவதற்கு ஏற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று அவைகளைப் பார்த்து மன ஆறுதல் பெறமுடியுமா என்றால் அதற்கெல்லாம் இடமில் லாத வகையில் அவர் சற்று உலாவலாம், விண்வெளியைப் பார்க்கலாம் கூட்டுக்குள்ளே இருந்து, அந்தக் கூட்டின் முகப்பிலேயிருந்து உலக வளையத்தை உற்று நோக்கலாம் என்று எண்ணுவாரேயானால் அவர் கண்ணிலே படுவது தூக்குமேடை. அந்தத் தூக்குமேடையிலே நாள்தோறும் தொங்குகின்ற கைதிகள் இப்படிப்பட்ட ஒரு கொடுமை யான, நினைக்கவே நெஞ்சம் நடுங்குகின்ற சிறைச்சாலையில் இந்திய நாட்டினுடைய விடுதலைக்காக பாடுபட்ட வீரச வர்க்கார் பல ஆண்டுக்காலம் அடைக்கப்பட்டிருந்தார். பலர் அந்த சிறைச்சாலையிலேயே உயிரையும் இந்த மண்ணின் விடுதலைக்காக தருகின்ற அளவிற்கு தியாகச் செம்மல்களாக வாழ்ந்தார்கள் என்று இந்தக் குறிப்புகளையெல்லாம் நம்மு டைய தமிழ்க்குடிமகன் அவருக்கே கைவந்த உணர்ச்சியோடு தீட்டியிருப்பதைப் படித்த நேரத்தில் சென்னைச் சிறைச்சா லையிலே எங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களை ஒப் பிட்டுப் பார்த்து இந்த நூல் முன்பே வெளிவந்திருந்து தமிழ்நாட்டுச் சிறைச்சாலைகளிலே அடைபட்டுக் கிடக் கின்ற நம்முடைய இருபதினாயிரம் கழகக் கண்மணிகளின் கைகளில் தரப்பட்டிருக்குமேயானால் திருச்சியிலோ, மதுரை யிலோ, கோவையிலோ, பாளையங்கோட்டையிலோ, சேலத்திலோ, சென்னையிலோ ஆங்காங்கு அடைக்கப்பட்டி ருக்கின்ற நம்முடைய கழக உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவ ரது கையிலும் இருந்திருக்குமேயானால், சிறைச்சாலையில் அதைப் படித்திருப்பார்களேயானால் இந்தச் சிறைச்சாலை யிலே மூன்றுமாத காலம், ஆறுமாத காலம் அனுபவித்த தொல்லைகள், அந்தமான் சிறையிலே வீரசவர்க்கார் போன்ற