உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 78 வர்கள் அனுபவித்த தொல்லைகளோடு ஒப்பிடும்போது ஒரு தூசுக்குச் சமானம் என்கின்ற எண்ணத்தோடு - இன்னும்கூட அதிக துணிவைப் பெற்றிருப்பார்கள். அந்த அளவிற்கு நான் இந்த நூலில் சிறைச்சாலை எவ்வளவு கொடுமையாக இருப்பது பற்றியும், ஒரு லட்சியத் திற்காக அந்தக் கொடுமைகளையெல்லாம் ஏற்றுக்கொண்ட வீரசவர்க்கார் போன்றவர்கள் வாழ்ந்தார்கள்; இன்னமும் இந்த நூலின் மூலமாக மூலமாக நம்முடைய உள்ளங்களிலே வாழ்ந்து கொண்டிருக் கின்றார்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் தமிழ்க்குடிமகன் இதைப் புலப்படுத்துகிற நேரத்தில் தன்னுடைய ஆதங்கத்தை இங்கே ஆங்காங்கு சுட்டிக்காட்டாமல் இருக்கவில்லை. இதைப்போன்ற பல நூல்களின் சாவர்க்கார் இருந்த சிறைச்சாலைக்குள்ளே கொட்டடிக் குள்ளே உள்ளே சென்று நான் படமெடுத்துக் கொண்டேன். அந்தப் படம்கூட இந்தப் புத்தகத்திலே வெளியிடப்பட்டிருக் கிறது. அதனைப் பார்த்து நானும் அந்தச் சிறைச்சாலையிலே இருந்தேன் என்று எண்ணிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியிடவில்லை. அந்தச் சிறைக்கோட்டத்தினுடைய அமைப்பு, அதிலே சாவர்க்கர் பெற்ற கஷ்ட நஷ்டங்கள் நீங்கள் சொல்வதைப் போல் ஒரு தியாக உணர்வு தமிழ் மக்களுக்கு ஏற்படவேண்டும் என்ற அந்த அடிப்படையிலே தான் இந்தப் படத்தை வெளியிடுகிறேன் என்று குறிப்பிட்டு விட்டு இன்றைக்கு யார் யாரோ சிறையிலிருந்ததாகத் தியாக முத்திரை பெறுகிறார்கள். யார் யாரோ சிறைச்சாலையைக் கண்டறியாதவர்கள் எல்லாம் தியாகி முத்திரை குத்திக் கொண்டு இந்த நாட்டிலே உல்லாசமாக வாழ முடிகிறது. அந்தப் பாரம்பர்யம் இல்லாதவர்களெல்லாம் இன்று நாட்டை ஆள முடிகிறது என்கின்ற ஆதங்கத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.