உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தற்காக. 'முன்னோர் மொழிதனைப் பொன்னேபோல் போற் றும்' தமிழகத்தில் அண்ணன் மொழிகளைக் கன்னலெனப் போற்றும் கடமை எனக்குண்டல்லவா? 8.289-இல் எனக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வு - திடீர் உயர்வன்று - திட்டமிட்ட உயர்வு படிப்படியான உயர்வு தலைவர் கலைஞர் அவர்களின் பாசமிக்க பரிவு என்பதை இந்தத் தொகுப்பு உறுதியாக வெளிப்படுத்தும். இந்த நூலுக்குப் பேராசிரியர் அவர்களைத் தவிர வேறு யார் அணிந்துரை எழுத முடியும்? தலைவரின் தோழர், இந்தத் தம்பிக்கு மானசீகமான ஆசான் நம் பேராசிரியர். நம் பேராசிரியர் 1957-இல் வெளிவந்திரா விட்டால் பச்சையப்ப னில் நான் அவருடைய மாணவன்தானே! ஆனாலும் இன்றும் அந்த உணர்வோடுதான் நூற்படியைத் தந்து அணிந்துரை எழுத வேண்டினேன். 27.10.92 மாலையில்தான் கொடுத் தேன். என்ன வியப்பு? 28.10.92 மாலையில் அம்பத்தூரில் நடைபெற்ற படத்திறப்பு விழாவின் போது அவரே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டார். ஒரே நாளில் அணிந்து ரையா? அதுவும் நூலை ஊன்றிப்படித்து (பல இடங்களில் அவர் கைப்படவே பிழைகளைத் திருத்தியுள்ளார்) தட்டச்சுச் செய்து தம்பி கையில் கொடுத்த அந்தப் பெருந்தன்மையை எண்ணிப் போற்றுகிறேன். முனைவர் பட்டம் பெற்றதைப் பாராட்டும் விழாவில் நான் கல்லூரியில் இருந்தபோது அருப்புக்கோட்டையில் என்னை 'ஓர் இளைய திரு.வி.க. என்று பாராட்டினார் நம் பேராசிரியர். அவர் மொழிக்கு லக்காக நான் வளர முயல்கிறேன். எனவே பன்முக ஆற்றலும் பீடுறு தலைமைத் திறமும் கொண்ட தலைவர் கலைஞர், தெளிந்த நீரோடையாக அழுத் தமாக நின்று துணை புரியும் பேராசிரியர் ஆகியோரை நம்பித்தானே தமிழ்க்குடிமகனும் வாழவேண்டும்! தமிழ்க் குடி மக்களும் வாழவேண்டும்!