________________
கலைஞர் மேல் காதல் கொண்டேன் சிறுபான்மையராகிவிட்ட தமிழ் மக்கள்! நம்முடைய நண்பர் கிருஷ்ணன் எடுத்துக்காட்டியது போல் அந்தமான் தீவில் முதலில் 35,000 பேர்தான் வங்காளத் தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். ஒரு பத்து பதினைந்து ஆயிரம்பேர் இந்தி மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் விட எண்ணிக்கையிலே அதிகமாக தமிழர்கள் 50,000 பேர் இருந்தார்கள். இந்தப் பத்து பதி னைந்து ஆண்டு காலத்திலே 50,000 தமிழர்கள் அப்படியே இருக்கிறார்கள். ஆனால் அந்த 50,000 பேர் அப்படியே இருக்க, 35,000 பேர் இருக்கின்ற வங்காளிகளும், 10,000 பேர், 12,000 பேர்களாக இருந்த இந்தி மொழி பேசுபவர்களும் இன் றைக்கு 20,000 பேர்களாக உயர்ந்திருக்கின்றார்கள். வங்காளி கள் 35,000 பேர் 60,000 பேராக உயர்ந்திருக்கின்றார்கள். இது எங்கே கொண்டுபோய்விடும்? இந்த எண்ணிக்கை உயர உயரத் தமிழர்களின் எண் ணிக்கை தானாகவே குறைந்துவிடும். இரண்டு குச்சியை வைத்து ஒரு குச்சியைச் சிறியதாக ஆக்கச் சொன்னால் ஒடிக்காமலே சின்னக்குச்சியாக ஆக்கச் சொன்னால் அதற்கு என்ன செய்வார்கள்? குச்சியையும் ஒடிக்கக் கூடாது. சின்னக் குச்சியாக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய குச்சியை அதற்குப் பக்கத்தில் வைத்துவிட்டால் மற்றது தானாகவே சின்னக் குச்சியாகிவிடும். அதைப் போலத்தான் 50,000 பேர் தமிழர்கள் இருந்தா லும்கூட அவர்கள் சிறுபான்மையினராவதற்கு ஏற்கனவே சிறுபான்மையினராக இருந்த 35,000 வங்காளிகளை 60,000 பேராக, 10,000, 15,000 பேராக இருந்த இந்திமொழி பேசுப வர்களை 20,000 பேராக உயர்த்திவிட்ட நிலையில் தானா