________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 80 கவே சிறுபான்மையினராகத் தமிழினம் அந்தமான் தீவில் ஆகியிருக்கிறது. இதேபோலத்தான் பக்கத்திலே இருக்கின்ற இலங்கைத் தீவிலும்! தமிழர்களுடைய எண்ணிக்கையைக் குறைக்கின்ற அந்தக் காரியத்தில் அங்கே இருக்கின்ற சிங்கள அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழன் தமிழ்நாட்டிலே மாத்திரமல்ல, கடல் கடந்து பிழைக்கச் சென்ற இடத்திலும் இப்படிப்பட்ட அவதிக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றான். அந்தமான் தமிழர்களானாலும் இலங்கைத் தமிழர்களா னாலும் அவர்களுக்காகக் கண்ணீர் வடிக்க வேண்டியவர்க ளாக, அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்களாக நாம் தான் இருக்கிறோம். அதிலே ஒரு சிக்கல் என்னவென் றால் அப்படி அவர்களுக்காகக் கண்ணீர் வடிக்கவேண்டுமா னால் அந்தமானிலானாலும், இலங்கையிலானாலும் நாம் தான் முன் வரவேண்டும். இங்கிருக்கின்ற தமிழன் தான் ஒருவனோடு ஒருவன் மோதிக்கொண்டு சீர்குலைந்து விட் டான் என்றால் அங்கே அவதிக்காளாகியிருக்கும் தமிழனா வது, நாள்தோறும் இனப்படு கொலைகளைச் சந்திக்கின்ற தமிழனாவது ஒற்றுமையாக இருக்கிறானா என்றால் ல்லை. ஒரு பக்கத்திலே வெறியர்கள் விமானங்களிலே வந்து குண்டுகளைப் பொழிகிறார்கள் என்ற செய்தி வருகிறது. இன்னொரு பக்கத்திலே போராளிகளுக்குள்ளே புகைச் சல். இவர்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்று கொள்கிறார்கள் என்ற அந்தச் செய்தி வருகிறது. நாம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறோம். இது தமிழர்க ளுடைய நிலை. தமிழினத்திற்கு ஏற்பட்ட சாபக்கேடு. அந்த சாபக்கேட்டிலிருந்து மீட்சி ஏற்படுமா? ஏற்படாதா? எனக்கே தெரியவில்லை. நினைப்பதற்கே இருக்கிறது. தயக்கமாக