உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

81 கலைஞர் மேல் காதல் கொண்டேன் இந்தச் சூழ்நிலையிலே தான் நம்முடைய அன்பிற்குரிய முனைவர் தமிழ்க்குடிமகனுடைய நூல் வெளியிடப்பட்டிருக் கிறது. தமிழ்க்குடிமகன் மதுரைப் பகுதியிலே மாத்திரம் அல்லாமல் தமிழ் நிலப்பகுதியில், தமிழர் உள்ளங்களில் நீங்காத இடத்தை வகிப்பவர்களாவார்கள். அவர்கள் சொன் னார்கள். நான் எங்கிருந்து விடுபட்டாலும் தலைவர் கலை ஞர் அவர்களுடைய நெஞ்சச் சிறையிலிருந்து விடுபட மாட்டேன்; என்னை விடுவித்து விடக்கூடாது என்று சொன்னார்கள். நிச்சயமாக நான் சொல்கிறேன். என்னுடைய சிறை யிலே, நெஞ்சச் சிறையிலே, வைத்திருப்பேன். நிச்சயமாகச் சொல்கிறேன். கைதி உடை போட்டுப் பார்க்கமாட்டேன். (கைதட்டல்) என்றென்றும் உங்களுக்கு இந்தத் தமிழ் உடையைப் போர்த்தியே உங்களை வாழ்த்திக் கொண்டிருப்பேன். (கைதட்டல்) உங்களைப்போன்ற தமிழ்க் குடிமகன்கள் பலர் இந்த நெஞ்சச் சிறைச்சாலையிலே தான் இருக்கிறார்கள். அவர்க ளாக வேண்டுமானால் எகிறிக் குதித்துப் பாய்ந்து இந்தச் சிறைச்சாலையிலிருந்து ஒரு சிலர் போயிருக்கிறார்களே தவிர அப்படி தப்பி ஓடியவர்களைப் பற்றி நான் கவலைப்ப டாமல் இருக்கலாமே தவிர தப்பி ஓடியவர்களைப் பிடித்து, இந்தச் சிறையிலே போட்டால் எவ்வளவு நாளைக்குச் சிறை யில் இருக்கப் போகிறார்கள் என விட்டு விடலாமே தவிர இந்தச் சிறை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை என்று எண்ணி இருக்கின்ற தமிழ்க்குடிமகனைப் போன்றவர்களை என்றென்றைக்கும் இந்தச் சிறைச்சாலையிலே வைத்திருப்பேன்.