________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 82 காரணம் அவர்களுடைய நெஞ்சச் சிறைச்சாலையில் நான் இருக்கின்ற காரணத்தால் அவர்களையும் சேர்த்து, அந்தச் சிறைச்சாலையையும் சேர்த்து என் நெஞ்ச சிறைச் சாலையிலே நான் வைத்திருக்கின்றேன். அப்படிப்பட்ட ஒரு அருமையான, இந்த இயக்கத்திற்கு கிடைத்த மாணிக்கமாக, தமிழ் உணர்வை எடுத்துச் சொல் கின்ற ஒரு பேராசானாக நமக்கு வாய்த்திருப்பவர் தமிழ்க்குடி மகன். ஆனால் தெருவிலே தனியாக நடந்துபோனால் அவ ரைப் பார்ப்பவர்கள் -வேடிக்கை பார்ப்பவர்கள் - யாரோ பக்கத்து ஊர் விவசாயி போகிறார் என்று எண்ணுகிற அளவிற்கு அவ்வளவு எளிய தோற்றமுடையவர். இவர்தான் தமிழ்க்குடிமகன், கல்லூரி முதல்வர் என் றால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவிற்கு எளிய தோற்றத்தை உடையவர். விவசாயி போல் காணப்படு பவர். ஆனால் தமிழ் விவசாயம் செய்து கொண்டிருப்பவர். அந்தத் தமிழ் விவசாயம் பல்கிப் பெருக இதுபோன்ற நூல்களை அவர் மேலும் தரவேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன். இவ்வாறு தலைவர் கலைஞர் உரையாற்றினார்.