இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3 83 கலைஞர் மேல் காதல் கொண்டேன் போற்றுவோம் கலைஞர் பண்பை! (முன்னாள் முதலமைச்சர் ம.கோ.இரா. (M.G.R.) மறைந் தபோது அண்ணா சாலையில் அமைந்திருந்த தலைவர் கலைஞர் அவர்களது சிலை சமூகக் கயவர்களால் சேதப்ப டுத்தப்பட்டது. அந்த நேரத்தில் எழுதப்பட்டது.) என் தமிழ்க் கலைஞ ரைப் போல் இதுவரை எவரும் வந்து தென்தமிழ் நாட்டுக் காகத் தியாகங்கள் புரிந்த தில்லை; வன்முறைக் கும்பல் இன்று வார்சிலை சிதைத்த பின்பும் என்தமிழ்த் தலைவன் பண்போ இம்மியும் மாற வில்லை; தீயவை பெருத்து நிற்க, திருடர்கள் கொழுத்து நிற்க நோயினை உணரா வண்ணம் நோஞ்சானாய்த் தமிழன் சாக, தாயவள் அடையும் துன்பம் தடுத்திட முடியா வண்ணம் போய்விடக் கூடா தென்றால் போற்றுவோம் கலைஞர் தம்மை!