உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

85 கலைஞர் மேல் காதல் கொண்டேன் கலைஞர்க்கா தாழ்வு மனப்பான்மை? முதல்வர் பொறுப்பில் இருந்தாலும் (கல்லூரி தொடர்ந்து 'முரசொலி' படிக்கும் வாசகன் நான்.19.10.88 ஆம் நாளைய 'முரசொலி' இதழில் கரிகாலன் பதில்கள் பகுதியில் என் நெஞ்சைத் துணுக்குற வைத்த பகுதி ஒன்று வந்தது. கலைஞர் அவர்களே விடை எழுதி விட்டாலும் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட என் போன்றவர் கள் முன்வந்து பதிலுரைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். அதன் விளைவாக எழுந்ததே இந்தக் கட்டுரை.5.11.88 ஆம் நாளைய 'முரசொலி'யில் வெளி வந்துள்ளது.) முதலில் வினாவிடைப் பகுதி கேள்வி:- 'தான் கலந்து கொள்கிற கூட்டத்தில் தனக்கு இணையான ஒரு தலைவர் இருந்தால்... கலைஞருக்கு ஒரு மாதிரி மனோதத்துவ ரீதியான தாழ்வு மனப்பான்மை தன்னைவிட யாரும் அதிகக் கைதட்டல் வாங்கக் கூடாது என நினைப்பார். அதனால்தான் முஸ்லீம் லீக் 40-வது ஆண்டு விழாவுக்கு அவரை மட்டும் அழைத்தோம்" என்று அப்துல் சமது அவர்கள் பேட்டியில் கூறியுள்ளது குறித்து? பதில்:- இணையான தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத் தில் மட்டுமல்ல, இணையற்ற தலைவர்களான பெரியார்,