உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் - 86 அண்ணா, காயிதே மில்லத், காமராஜ், ராஜாஜி, ஜீவா ஆகியோருடன் எத்தனையோ கூட்டங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்திரா காந்தியம்மையார் பிரதமராக இருந்தபோதும் சரி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி, அவருடன் பொதுக்கூட்டங்களில் பேசி யிருக்கிறேன். ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களுடன் பொது நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். அவ்வளவு ஏன், சமது அவர்களுக்கு மிகவும் விருப்பமான உதாரணம் ஒன்று சொல்லுகிறேனே அண்மையில் பெரியவர் செங்கல்வரா யன் பிறந்தநாள் விழாவில் நானும்,சமதும், காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் அவர்களும் கலந்து கொண்டு பேசினோமே அதை சமது மறந்துவிட்டாரா? 'மனோதத்துவ ரீதியான எனது தாழ்வு மனப்பான்மை' என்று சமது அவர்கள் கேலி பேசுவதற்காக நான் வருந்தவில்லை! வாழ்க அவரது பெருந்தன்மை! இதற்கு நான் எழுதிய கட்டுரை: அண்மைக் காலத்தில் தி.மு.க. முஸ்லிம் லீக் உறவில் கீறல் ஏற்படுத்தி அதற்கான காரணங்களையும் விரிவாக அள்ளிவிடும் வேலையில் இறங்கியுள்ளார் அப்துல் சமது. அரசியல் கோணத்தில் கலைஞரையோ, தி.மு.க.வையோ அவர் எப்படி வேண்டுமானாலும் திறனாய்வு செய்யட்டும். அவற்றை உரிய முறையில் சந்திப்பதும் விடை சொல்வதும் தி.மு.க.வின் பொறுப்பு. நான் அதில் தலையிட்டு எதுவும் கூற வேண்டியதில்லை. ஆனால் ஒரு தமிழ்ப் பேராசிரியன் எனும் முறையிலும் கலைஞர் அவர்களோடு நெருங்கிப் பழகிய ஒரு கல்லூரி முதல்வர் எனும் முறையிலும் மேடையில் அவர் நடந்து கொள்ளும் முறை பற்றி நன்கு அறிவேன். இந்த நேரத்தில் நான் என் கருத்தைக் கூறாவிட்டால் கடமை தவறியவன் வேன். ஆ