________________
87 கலைஞர் மேல் காதல் கொண்டேன் அப்துல் சமதுவின் செய்தி இப்படி அமைகிறது. 'தான் கலந்து கொள்கிற கூட்டத்தில் தனக்கு இணை யான ஒரு தலைவர் இருந்தால் கலைஞருக்கு ஒரு மாதிரி மனோதத்துவ ரீதியான தாழ்வு மனப்பான்மை - தன்னைவிட யாரும் நன்றாகப் பேசக் கூடாது தன்னைவிட யாரும் அதிகக் கைதட்டல் வாங்கக் கூடாது என நினைப்பார். அதனால்தான் முஸ்லிம் லீக் 40-வது ஆண்டு விழாவுக்கு அவரை மட்டும் அழைத்தோம். இது குறித்து கலைஞர் அவர்கள் விடை சொல்லும் போது தனக்கு இணையான தலைவர்களுடனோ, பெரியார், அண்ணா, காயிதே மில்லத் போன்ற இணையற்ற பெருந்த லைவர்களுடனோ பேசும்போது தன் நிலை என்ன என்ப தைத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். நான் கூற வருவது, தனக்கு எந்த வகையிலும் இணையே இல்லாத எங்களைப் போன்றவர்களிடமும் கலைஞர் எப்படி நடந்து வந்திருக் கிறார் என்பதைத்தான். நான் நேரடி அரசியலில் இருந்த காலம் முதல் (1969) இன்றுவரை தடம் மாறாதவன் என்ற ஒரு தகுதியைத்தான் கலைஞர் அவர்களிடம் புலப்படுத்தி இருக்கிறேன். இந்த நிலையில் 1979 ஆம் ஆண்டு நான் கல்லூரி முதல்வர் ஆனதும் கலைஞர் அவர்களைக் கல்லூரிக்கு அழைத்துப் பேசச் செய் தேன். ஓரளவு என் ஈடுபாடு தெரியுமே தவிர, தனிப்பட்ட முறையில் கூட நான் அதுவரை அவரைச் சந்தித்துப் பேசிய தில்லை. எனினும் முதல்வர் எனும் முறையில் நான் அளித்த (5 மணித்துளி) வரவேற்புரை அவரைப் பெரிதும் கவர்ந்தது. அந்த வரவேற்புரையின் உள்ளடக்கம், உணர்ச்சி,கலைஞரி டத்தில் என் எதிர்பார்ப்பு ஆகியவற்றை முழுமையாகப் புரிந்துகொண்ட கலைஞர் அவர்கள் சிறப்புரையாற்றும் போது "தமிழ்க்குடிமகன்” எனும் தலைப்பையே தேர்ந்தெ டுத்துக் கொண்டார்கள். எம்.ஜி.ஆர். அரசால் திடீரென