உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 88 அறிவிக்கப்பட்ட 9000.ரூ வருமான வரம்பு பற்றிய செய்தி களை உள்ளடக்கிப் பேசினாலும் சிலேடைப் பொருளில் தலைப்பை அமைத்துக் கொண்ட கலைஞர் அவர்களை எவரும் கட்சி வேறுபாடு கடந்து பாராட்டவே செய்வர். “அந்தத் தமிழ்க்குடிமகன் காப்பாற்றப்பட வேண்டும்" என்று தொன்மை வரலாறு படைத்த தமிழ்க் குடிமகனையும், வருமான வரம்புக்காட்பட்டுத் தவிக்கும் பிற்படுத்தப்பட்ட தமிழ்க் குடிமகனையும் ஒருங்கிணைத்துப் பேசினார். நேரடி அறிமுகமில்லாத என்னை ஒரு பொருட்டாக மதித்துத் தலைப்பாக்கிப் பேசியிருக்கிறார் என்று சொன் னால் இதுதான் கலைஞரின் தாழ்வு மனப்பாங்கா? சி.இறையரசன் எனும் அன்பர் 'குறளும் பொருளும்” எனும் நூலை எழுதினார். அவர் திருச்சி மாவட்டக் கட்சியில் ஓர் ஒன்றியப் பொறுப்பாளர் எனும் முறையில் கலைஞர் அவர்களை அணுகி வெளியீட்டு விழாவுக்கு வருகை தரக் கேட்டுக் கொண்டார். கலைஞரும் இசைந்தார். நூலைப் படித்துத் திறனாய்வு செய்வதற்குரியவர்கள் எனும் வகையில் ஐந்தாறு பெயர்களை இறையரசன் குறிப்பிட்டார். அவற்றுள் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. உடனே கலைஞர் என் பெயரைக் குறிப்பிட்டு அழைக்கச் சொல்லி விட்டார். அதன் படி நான் கலந்துகொண்டேன். திருச்சி தேவர் மன்றத்தில் புரவலர் அன்பில் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி. நான் திறனாய்வுரை நிகழ்த்திப் பேசிய பின் கலைஞர் பேசும்போது குறிப்பிட்டார். 'நான் குற ளோவியம் எழுதி வருகிறேன். அதில் ஏதாவது குறையி ருப்பதாக, தமிழ்க்குடிமகன் போன்ற நம்பிக்கைக்குரிய பேராசிரியர்கள் ஓர் அஞ்சலட்டையில் எழுதிப் போட்டால் கூட நான் திருத்திக் கொள்ளத் தயார்' என்று பேசினார். ஒரு ஒரு தமிழ்ப் பேராசிரியன், அதிகம் அறிமுகமில்லாத பேராசிரியன் கலைஞரைப் போலச் சொற்பொழி