________________
89 கலைஞர் மேல் காதல் கொண்டேன் வாலோ, கனல் கக்கும் வேகமான எழுத்தாலோ சிலிர்க்க வைக்கும் திரைப்பட உரையாடலாலோ, வேகமான செய லாலோ பெயர் பெறாத ஒரு பேராசிரியன், குறையைச் சுட்டினால் கூடத் திருத்திக் கொள்ளத் தயார் என்று கலைஞர் குறிப்பிடுவார் என்றால் இதுதான் கலைஞரின் தாழ்வு மனப் பாங்கா? 31.7.1983-ல் இராமநாதபுரத்தில் தி.மு.க. மாநாடு, ஈழத் தமிழர் படுகொலை மிகவேகமாக நடந்து, அகதிகள் கூட்டங் கூட்டமாக இராமேசுவரம் வந்து சேர்ந்து கொண்டிருந்த நேரம். தமிழகம் முழுவதும் ஒரே நிலையில் கொந்தளித்து எழுந்த காலம். அந்த மாநாட்டில் பாண்டித்துரைத் தேவர் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதுவும் கலைஞர் அவர்களே சென் னையிலிருந்து திரு.தென்னரசு அவர்கட்குத் தொடர்பு கொண்டு அவர் வாயிலாக என் ஒப்புதல் பெறப்பட்டது. தமிழ் வளர்த்த வள்ளல் பாண்டித்துரைத் தேவர் படத் தைத் திறந்து வைத்து 20 மணித்துளிகள் உரையாற்றினேன். ஏறத்தாழ 2 இலட்சம் பேராவது அரங்கில் இருந்திருப்பர். வள்ளல் அவர்கள் ஓடி ஓடிச் செய்த தமிழ்த்தொண்டுகளை வரிசைப்படுத்தியும், பாஸ்கர சேதுபதிக்கும், பாண்டித்துரை தேவருக்கும் இருந்த உறவுப் பகுதியை உணர்ச்சியுடன் குறிப்பிட்டும், ஒரு தொண்டன் தன் தலைவனிடத்தில் என்ன எதிர்பார்ப்பான் என்பதைக் குறள் மேற்கோளோடு ஒப்பிட் டும் உருக்கமாகப் பேசி முடித்தேன். 'தான் கலந்து கொள்கிற கூட்டத்தில் தன்னைவிட யாரும் நன்றாகப் பேசக்கூடாது -தன்னைவிட யாரும் அதிக கைதட் டல் வாங்கக் கூடாது என்று கலைஞர் நினைப்பார்' என்று அப்துல் சமது குற்றம் சாட்டுகிறாரே அது எவ்வளவு வஞ்சகமானது என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன்.