உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 90 நான் பேசும்போது பலமுறை கைதட்டல்கள். விறுவி றுப்போடும் உருக்கத்தோடும் முடிந்த அந்த பேச்சுக்குப் பலநூறு பாராட்டுதல்கள். இவற்றை எல்லாம் தாண்டி அமைந்தது தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டு. நான் பேசி முடித்துவிட்டு என் இருக்கைக்குத் திரும்பி னேன். அவர் முன்னால் உள்ள டைவெளியில் நடந்து முதல்வரிசை தாண்டி உள் வளைந்து இரண்டாவது வரிசை யில் உள்ள என் இடத்துக்கு வரவேண்டும். அப்படி நான் கலைஞர் இருக்குமிடத்தைக் கடக்க முயன்றபோது எதிர் பாரா வகையில் அவரே எழுந்து நின்றார். என் கைகளைப் பற்றிக் குலுக்கினார். அவர் சொன்ன சொற்கள் என் நெஞ்சில் அப்படியே பதிந்திருக்கின்றன. இதற்கு மேல் எனக்கொரு பாராட்டு விழாவோ, வாழ்த்து மொழிகளோ தேவையில்லை எனும் அளவுக்கு அவருடைய பாராட்டுச் சொற்கள் இருந் தன. அதனை இன்றைக்குத்தான் எழுத்து வடிவில் முதன் முறையாக வெளியுலகுக்குத் தெரிவிக்க நேரிடுகின்றது. அவர் சொன்னார், 'ஈழத்தமிழர் பிரச்னை என்றாவது ஒருநாள் தீர்ந்து விடும். ஆனால் உங்கள் பேச்சு என்றும் அழியாது' என்றார். நான் மிகவும் நெகிழ்ந்து போய் விட்டேன். என் பேச்சு அவரை எவ்வளவு ஈர்த்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள் வது எளிது. ஆனால் ஒரு தொண்டன் நிலையில் இருக்கும் என் பேச்சு அவரால் இவ்வளவு பாராட்டப்பட்டது என்றால் இதுதான் கலைஞரின் தாழ்வு மனப்பாங்கா? பிறர் நன்றாகப் பேசுவதைப் பொறுத்து கொள்ள முடியாதா போக்கா? அப்துல் சமதுக்குத்தான் வெளிச்சம். சென்னை, பெரியார் திடலில், 'குறளோவியம்' வெளி யீட்டு விழா நடைபெற்றது. தலைமையேற்று வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கிய பெருமக்கள் பலர். கி.ஆ.பெ.வ.சு ப.மாணிக்கனார், ச.தண்டபாணி தேசிகர் சாவி, சாண்டில்யன்