________________
91 கலைஞர் மேல் காதல் கொண்டேன் ஆகியோர் கலந்து கொண்டனர். வாழ்த்துரை வழங்கிய ய ஒன்பது பேருள் நானும் ஒருவன். என் பேச்சு அவைக்கு இனித்தது என்பதோடு நான் விட்டு விட்டால் அது பொருந்தாது. அடுத்த நாள் மாவட்டச் செயலாளர்கள் கலைஞருடன் பேசிக் கொண்டிருந்த போது "தமிழ்க்குடிமகன் பேச்சு மிக எடுப்பாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டொரு நாட் சென்றபின் நண்பர் தங்கப்பாண்டியன் என்னைச் சந் தித்து இதைக் கூறியபோது என் உள்ளம் எப்படிப் பரபரத்தி ருக்கும்? தலைப்பிட்டுப் பேசிப் பாராட்டுவது, நம்பிக்கையுடன் போற்றுவது, தனியாகப் பாராட்டுவது, உரியவர் இல்லாத போதும் பிறரிடம் பராட்டுவது என்றெல்லாம் பல பண்பு களை வைத்துக் கொண்டிருக்கிற கலைஞரா தாழ்வு மனப் பாங்குடையவர்? அப்துல் சமதுக்கு இது அடுக்குமா என்று தான் கேட்கத் தோன்றுகிறது! 'குறளோவியம்' விழாவில் நான் பேசியதன் விளைவு, சிறிதுகாலம் கடந்து எனக்கு மற்றுமொரு சிறப்பைத் தேடித் தந்தது. 'குறளோவியம்' முதற்பதிப்பு விற்றுத் தீர்ந்து இரண் டாவது பதிப்பு அச்சானபோது அதன் வெளியீட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. வீரபாண்டியாரும், பாரதி பதிப்ப கத்தாரும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் விழா அது. அதில் எனக்கு என்ன பொறுப்பு தெரியுமா? நான் தான் வெளியீட்டாளர். ஒரு நிகழ்ச்சியில் சிறப்பாகப் பேசிக் கைதட்டுதல்கள் வாங்கிவிட்டவன் எனும் முறையில் கலை ஞர் இதைத் தாங்கிக் கொள்ளமாட்டார் எனும் அப்துல் சமதின் கூற்று உண்மையாக இருந்தால் சேலம் நிகழ்ச்சியில் எனக்குப் பதவி உயர்வு ஏன்?