உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 36 92 தாழ்வு மனப்பாங்கு இருந்திருந்தால் கலைஞர் என்னை அடுத்த நிகழ்ச்சிக்கு அழைக்கச் சொல்லி வற்புறுத்தி இருப்பாரா? அது மட்டுமன்று "வெளியீட்டுரைதான் விரிவாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் ஒரு மணிநேரம் பேசுங்கள். எனக்கு ஏற்புரைதானே.15 மணித்துளியில் முடித்து விடுவேன்" என்று காதில் ஓதினார். அதிலும் அனைவரும் பேசி, கடைசியாக கலைஞர் பேசுவதற்கு இடையில் நான் பேசியாக வேண்டும். கூட்டம் என்ன எதிர்பார்க்கும், கலைஞர்க்கு இடையில் வந்த நந்தி என்று கூட என்னை இகழும் என்பது எனக்குத் தெரியும். இந்த நிலையில் நயமான செய்திகளுடன் அவையினரின் கையொலிகளுடன் நான் 45 மணித்துளிகள் பேசியிருக்கி றேன். தன் முன்னால் என்னைத் தாராளமாய்ப் பேசவிட்டு நான் கை கையொலியால் வரவேற்கப்படும் போதெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்துவிட்டு ஏற்புரையிலும் என்னைப் பாராட்டிய பெருந்தன்மை படைத்தவர் கலைஞர். 'கிராமத்து விவசாயி போல் தோற்றமளிக்கும் எளிமை படைத்தவர். ஆனால் கல்லூரி முதல்வர் எனும் பதவியால், பெருமை படைத்தவர்' என்றல்லவா பாராட்டினார்? இன்று இயக்கத் தோழர்களும் பொதுமக்களில் பலரும் என் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்றால் 'கலைஞர் என்மீது மதிப்பு வைத்திருக்கிறார்' என்பதைத் தெரிந்து வைத் திருப்பது தானே காரணம்! ஒருவனது பேச்சுத் திறமையை எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொண்டு பாராட்டி, மேலும் மேலும் வளர்த்து ஆளாக் கிவிட்டு, ஒவ்வொரு பேச்சையும் கேட்டுச் சுவைத்து நெகிழ்ந்து பாராட்டி, தான் பாராட்டுவதால் நாடே பாராட்ட வேண்டும் எனும் எதிர்பார்ப்போடு என்னை ஆளாக்கிவிட்டி