உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

93 33 கலைஞர் மேல் காதல் கொண்டேன் ருக்கும் கலைஞரா தாழ்வுமனப் பாங்குடையவர்? அதை யும் ஒரு பொறுப்புடைய அப்துல் சமதா இப்படிக் கூறுவது? இதுதான் முரண்தொடை போலும்! அப்துல் சமதுக்கு வேறு இடம் போக வேண்டும் எனும் தேவை ஏற்பட்டால் போகலாம். ஆனால் போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி விட்டுப் போகக்கூடாது. புளுகுகளை அள்ளி விடக்கூடாது. பொருந்தாதவற்றைக் கூறி, 'இவர் கூறும் அனைத்தும் இப்படித்தான் இருக்கும்' என்று பொதுமக் கள் முடிவுக்கு வரும்படி புளுகக்கூடாது. 'கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லுதூ உம் ஐயம் தரும்” எனும் குறளையே அவருக்கு விடையாகத் தருகிறேன். தாழ்ந்து தலைகவிழ்ந்து தடுமாறித் தடமாறிப் போய்க் கொண்டிருக்கும் தமிழகத்தை தூக்கி நிறுத்திடத் துடிப்புடன் செயலாற்றும் தோள் (ஆள்) வலிமை படைத்த ஒரே தலைவர் கலைஞர் என்பதை உலகம் உணரும்; பொழுதும் புலரும்!