உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 94 சட்டப் பேரவையில் பாராட்டு! (8.2.89 அன்று நான் சட்டப் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்ற போது என்னை இந்த உயர்வுக்கு ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய பாராட்டுரையின் சுருக்கம்.) மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி:- பேரவையினு டைய மாண்புமிகு தலைவர் அவர்களே, தமிழை வாழ்த்துவ துபோல உங்களை வாழ்த்துகின்ற பேறு பெற்றமைக்காக நான் பெருமையடைகிறேன். இந்த அவைக்குத் தமிழ்க்குடிம கன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமுடைய ஒன்றாகும். தாங்கள் பெரும் புலவர் என்கின்ற வகையில் தமிழகத் திலே அறிமுகம் ஆனவர். அதுமாத்திரமல்ல; யாதவர் கல்லூ ரியினுடைய முதல்வராக இருந்து, நம்முடைய எதிர்க்கட்சி - யினுடைய தலைவர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியதைப் போல அந்தக் கல்லூரியைச் சிறப்புற நடத்தி மேன்மை பெற்றவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு (1979-ல்) தாங்கள் முதல்வராக வீற்றிருந்த யாதவர் கல்லூரிக்கு நான் அழைக்கப்பட்டிருந் தேன். ஆளும் கட்சியின் சார்பாக அல்ல; எதிர்க்கட்சித்