________________
95 35 கலைஞர் மேல் காதல் கொண்டேன் தலைவர்களில் ஒருவனாக அழைக்கப்பட்டிருந்தேன். அப் போது நான் மேடையிலே அமர்ந்த பிறகு உங்களுக்கு விருப்பமான தலைப்பிலே பேசலாம் என்று பணித்தீர்கள். நான் அன்று பேசிய அந்த வாசகத்தை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். "நீண்ட உரைக்குத் தலைப்பு எதுவாக இருக்கலாம் என்று மேடையில் இருந்தவாறு நான் யோசித் தேன். தலைப்பு தமிழ்க்குடிமகன் என்பதுதான். தமிழ்க்குடிம கன் பழங்காலத்தில் குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களைப் பிரித்துக் கொண்டு அந்த நிலங்களுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, வாழ்வு நெறியை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்தவன்'. தமிழ்க் குடிமக்களுக்காக அமைந்துள்ள இந்த ஆட்சியில் தமிழ்க்குடிமகனாகிய தாங்கள் இந்தப் பேரவைக்குத் தலை வராகப் பொறுப்பேற்றிருப்பது மிக மிகப் பொருத்தமான தாகும். பட்டிமன்றங்களிலே நீங்கள் தலைமை ஏற்று நல்ல தீர்ப்புகள் பலவற்றை வழங்கியது குறித்து இங்கே எடுத்துச் சொன்னார்கள். பட்டிமன்றங்களிலே தலைவர் தீர்ப்பு வழங் குகிற நேரத்தில் அவையிலே உள்ளவர்களைப் பார்த்து உங்களுடைய தீர்ப்பு என்ன என்று அவர்களையெல்லாம் கேட்டு, அவர்கள் கையொலி மூலமாகவோ அல்லது கைக ளைத் தூக்கி உயர்த்திக் காட்டுவதன் மூலமாகவோ அவர்க ளின் கருத்துக்களை அறிந்து அந்தக் கருத்துக்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்குவது பட்டிமன்றத்திலே ஒரு மரபு. அதைப்போலவே இங்கே சில நேரங்களிலே தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் தங்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் தாங்களே எது சரி, எது தவறு என்று சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்பு வழங்கவேண்டிய நிலைமையும் தங்களுக்கு ஏற்படும். அப்படி ஏற்படும்போது எதிர்க்கட்சிகளின்