உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 95 96 சார்பாகவும் நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தவறு ஆளும் கட்சியின்பக்கம் இருந்தாலும், நீங்கள் கண்டிப்பாக நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக உண்டு. இப்படிச் சொல்வதன் காரணமாக எதிர்க்கட்சியிலே உள்ள அருமைத் தலைவர்களுக்கு எந்தவிதமான அச்சமும், தங்களுடைய தீர்ப்பைப் பற்றி இருக்கத் தேவையில்லை என்பதை நான் இங்கே ஆளும் கட்சியின் சார்பாக உறுதி அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தலைவர் அவர்களே, தாங்கள் நடத்திய பத்திரிகை களுடைய பெயர்களை நான் பார்த்தேன். "தென்மொழி, “அறிவு”, “கைகாட்டி” என்று மூன்று பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். எனவே இந்த அவையிலே தென்மொழிதான் முழங்கும். தென் மொழிகளிலே முதல் மொழியாம் தமிழ் மொழிதான் முழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அறிவு என்ற ஏடு நடத்தியிருக்கிறீர்கள். உங்கள் தீர்ப்பெல்லாம் அறிவார்ந்த தீர்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கைகாட்டி என்ற பத்திரி கையை நடத்தியிருக்கிறீர்கள். இந்த அவையிலே கேள்வி நேரத்தில் கைதூக்குகின்றவர்கள் பக்கமெல்லாம் திரும்பிப் பார்த்து, அவர்களுக்கெல்லாம் நீங்கள் நல்ல வாய்ப்புகளை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எனவே இந்த அவையினுடைய மாண்பைக் காப்பாற்றக் கூடிய தமிழ் தமிழ்க்குடிமகனாகப் பொறுப்பேற்றிருக்கிற உங்களை என் சார்பிலேயும், இந்த அவையிலே உள்ள உறுப்பினர்கள் அனைவரின் சார்பிலேயும் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். மகனாக