பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சித்திர விளக்கம்; வேதநாயகம் பிள்ளையின் ‘வேகம் கெடாத நடை’; அ. மாதவய்யாவின் ‘மகிழ்வூட்டும் கதை’; பண்டித நடேச சாஸ்திரியின் ‘எழுத்துக் கவர்ச்சி, நிதானம்’ ஆகிய இலக்கியப் பண்புகளைப் போற்றும் இவர், தம் எழுத்துக்களில் மேற்கண்டவற்றை அரை குறையாகப் பற்றக்கூட முயலவில்லை!


ஒரு நாள் க. கா. சு!

‘நளினி’ என் அனுதாபத்திற்கு இலக்காகும் ஓர் அபலைப் பெண். அவளுடைய பேதை மனத்தின் நுணுக்கமான மனத்தவத்தை-அந்த உயிர்த் தத்துவத்துக்கு அடித்தளமாய் அமைந்திருந்த அவளுடைய களங்கமில்லாப் பாவனைகளை நுழைபுல நுண்மாண் அறிவுடன், மரபறிந்து, மாயை புரிந்து, மணம் எடுத்துச் சொல்வதற்கு ‘தகுந்த உள்ளம்’ அவளுக்குக் கிடைக்கவில்லை!

பட்டம்:

‘ஒரு நாள்’ என்னும் அற்புதமான நவீனத்தை எழுதிய ‘அந்த ஒரு நாள் க. நா. சு.‘ அவர்களை இனி தமிழ் எழுத்துலகம் தரிசிக்க வாய்ப்பில்லையோ, என்னவோ?

பெருங்காயம் வைத்த வெறும் பாண்டம்= க.நா. சுப்ரமணியம்...! உள்ளே பண்டமில்லை ‘கமகம’ என்ற மணம் ஏமாற்றத்தைத் தருகிறது.

98