பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தேவானை அழகிய பெண். நாச்சிமுத்துவின் மகள். தகப்பனை உண்மை அன்பிலே குழைத்தெடுப்பவள். ‘ஆள்’ உயரத்துக்கு வளர்ந்து, ஓங்கி நிற்கிற சின்னப்ப முதலியாரின் சோளக் காட்டுக்குள்ளேதான் சின்னப்ப முதலியாரின் பேரன் சுப்பிரமணியத்தின் பேரின்பக் காடு அமைந்திருந்தது. தேவானையுடன் சோளக் காட்டுக்குள்ளேதான் அவன் தன்னுடைய இன்ப உலகத்தைப் படைத்திருந்தான். தகப்பனும் அத்தையும் வீட்டை விட்டுப் போன பின் சுப்பிரமணியத்தைச் சந்திக்கச் சோளக் காட்டுக்குள் வந்து விடுவாள் தேவானை! அவளுக்கும் அவனுக்கும் என்றே சோளக்காடு உண்டாகியது போல் ஆகிவிட்டது.

நாச்சிமுத்து போலீசில் அகப்படுகிறான். சூதாட்டத்திலே அகப்பட்ட அவன், சின்னப்ப முதலியின் ஆசை வலையில் சிக்குகிறான். அதாவது, தன் மகள் தேவானையை அந்தக் கிழவனுக்கு மணம் செய்து தருவதற்கு ஒப்புக் கொண்டு சேவகரிடமிருந்து தப்புகிறான்.

தேவானை, சுப்பிரமணியத்தோடு நடத்தி வந்த ‘பகல் நேரக் களியாட்டம்’ நாச்சிமுத்துக்கோ, அவள் அத்தைக்கோ தெரியாது. உனக்கும் சின்னப்ப முதலிக்கும் கல்யாணம்! என்ற செய்தியைத் தன் மகளிடம் கூறத் தவிக்கிறான் நாச்சிமுத்து. அவள் ‘அறியாக் குழந்தை’ என்ற உணர்வு அவனுக்கு!-தேவானை தனக்கும் சின்னப்ப முதலிக் கிழத்துக்கும் கல்யாணம்

100