பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘கருமணியிற் பாவாய்’ என அவள் ஆகிவிட்டாளா? ஊ ஹும்!

சுப்பிரமணியம் கைகாரன். ‘சும்மா பார்த்தேன்’ என்கிறான்.

பிறகு, தன்னைப் பணக்காரன் ஒருவனுக்குக் கட்டிக் கொடுக்கத் தன் தந்தை திட்டம் புனைந்திருப்பதாக விவரம் மொழிகிறாள் அவள்.

“அப்படியா? நெசமாணுமா? எனக்குத் தெரியாதே?” என்கிறான் காதலன்.

“தெரிஞ்சா என்ன பண்ணுவீங்களாம்?” என்று வினவுகிறாள் காதலி.

“என்ன பண்ணுவனா? அது எனக்கே தெரியாது!” என்று வீரத்துடன் கூறினான் சுப்பிரமணியன். அவன் வஞ்சன்! அதனால்தான் அவன் உள்ளுரச் சிரித்தானோ?

பேதை அவள் நம்பினாள். நம்பாமல் இருக்கமுடியுமா?

பேசிக்கொண்டிருப்பதில் புண்ணியம் இல்லை. என்ற ‘காரியச் சித்தக்காரன்’ சுப்பிரமணியம். காலத்தைக் காட்டி, கனவைக் கூட்டி, காதலியை ஓட்டி, காலத்தை ஓட்டினான். அவளைத் தன் இன்பக் கருவியாக ஆக்கி விட்டான்.

பேதை அவள்!

இறுதியில்:

தன்னைத், தெய்வம்போல வந்து சிறையினின்றும் மீட்ட கிழம் சின்னப்ப முதலியாருக்குத் தன் அருமைப் புதல்வி தேவானையைக் கட்டிக்கொடுக்கப் போவதாக மகளிடம் சொல்கிறான் நாச்சிமுத்து. “ஏராளமா நகை

103