பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாத்திரத்தில் நீர் இருந்தால்தான் பயன்படும்; வெற்றுப் பாத்திரமாய் இருந்தால், வெறும் பாத்திரம் என்றாவது சொல்லிக்கொள்ள முடியும்! கொஞ்சம் நீருடன் இருப்பதை என்னவென்று சொல்லமுடியும்? அப்படியொரு புது உவமை கூறும்படிதான் இருக்கிறது. ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதி ‘முன்னுரை’யோடு வெளி வந்துள்ள ‘அறுவடை’ என்னும் இந்த நாவல். நாவலாகவும் இல்லாமல், நாவல் என்கிற இலக்கணங்களை மீறியதாகவும் இல்லாமல், ஏதோ ஓர் ‘இரண்டுங்கெட்ட’ போக்கில் உருவாக்கப்பட்டு, க.நா.சு. மட்டும் ரசிக்கிற மாதிரி எழுதியிருக்கிறார்! ‘குருசிஷ்ய விசுவாசம்’ என்றார்களே, அப்பண்பாடு, இவ்வகைதானோ?...


நடையும் தமிழும்

மாவட்ட இலக்கியம் (Class Literature) என்று சொல்லிக் கொள்கிறவர்கள் கூட, ஊன்றிப்பார்த்தால் இப் புதினத்தில் ஏதும் இல்லை என்பதை மிக எளிதில் கண்டு கொள்வார்கள்!

“தமிழ் இலக்கியத்துக்கே தொண்டு!”என்று இதைப் பற்றி மார்தட்டிச் சொல்லிக்கொள்ளத்தக்க அளவுக்கு இதில் என்ன இருக்கிறதோ, அந்தக் கலைத்தன்மை அந்தக் க.நா.சு. வுக்கே வெளிச்சம்! க.நா.சு. வின் வாக்கு தேவ வாக்கன்று என்பதை அம்பலப்படுத்திய கடமை யாரைச் சார்ந்ததென்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும்!

“No novel is perfect” என்கிறார் சாமர்செட்மாம். “நாவல் பழையதைத்தான் சொல்கிறது; ஆனால் பழையதைப் புதியதாகச் சொல்கிறது.” என்கிறார் அவர் எந்த

107