பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாவலும் நம் விருப்பத்திற்கேற்றபடி அமைவது கிடையாதுதான். அதைக்கூறிவிட யாருக்கும் உரிமை இல்லை தான். அதற்காக ஒன்றுமில்லாத எழுத்தை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு புகழ்வதில் என்ன லாபம்? லாபமில்லாமல் என்ன? இந்தத் திருக்கூட்டத்தின் தலைவலி நம்மீது சுமத்தப்பட்டுவிடுகிறதே!...


பார்வை

கொங்கு நாட்டுத் தமிழைச் சிறப்பாகப் பயன்படுத்தி அதற்குக் கலை வடிவம் தருவதில் சிறப்பான நயம் இந்நாவலாக்கத்தாளரிடம் இருக்கிறது. இச் சிறப்பியல்பு - மட்டும்; அவரைப் பூமாலை சூட்டிக் கவுரவப்படுத்திவிட முடியாதல்லவா?

அவருடைய முதல் நாவல் ‘நாகம்மாள்’. விதவை ஒருத்தியின் “கோயில் காளை’த் தனத்தை உருவாக்கி கொங்கு நாட்டு வளப்பச் சூழலுடன் அழகுற எழுதி ஓரளவு வெற்றிபெற்று, கலைஞர். கு.ப. ராஜகோபாலன் அவர்களிடம் பாராட்டுப் பெற்றார். அதே வேகத்துடன், தன் இலக்கிய வாழ்வில் அவர் வளரவில்லை என்பதை அறிய அவருடைய சிறுகதைகளைப் படித்தாலே போதும்! -கொஞ்சநாள்-கல்கி பாணி-கொஞ்சம் க.நா.சு தடம்-கொஞ்சம் சரத்பாபுவின் வழி!-அதன்பின் இன்னும் சில சிறு கதைகள்-‘மெளனி’யைப் பின்பற்றியவை: அப்பால், மாப்பஸான். பால்ஸாக், பிளாபர்ட் போர்வை!-இப்படிக் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தே வளர்ந்த வளர்க்கப்பெற்ற வளர்ச்சி இது! உண்மையான அவருடைய இலக்கிய வாழ்வை-அவருடைய கலைத்-

108