பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. செம்பியன் செல்வி
—கோவி. மணிசேகரன்—

கி.பி. 1070 முதல், 1120 வரை அரசாண்டான் முதலாம் குலோத்துங்க சோழன்.

வடக்கே மகாநதி முதல், தெற்கே குமரி முனைவரை எல்லையாகக் கொண்ட சோழப் பேரரசை நிலை நாட்டக் கலிங்க அரசன் அனந்தவர்மன் திட்டம் தீட்டுகிறான். அவனுக்கு உறுதுணையாகச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் அவனுடைய படைத்தலைவன் ஆனந்த பாலையன், மற்றும் பல சிற்றரசர்கள் அமைகின்றனர்.

ஒரு வலிவற்ற நாட்டை வென்று புகழ் கொள்வதில் மதிப்பில்லை என்றுணர்ந்த குலோதுங்கச் சோழன் தன்னுடைய தானைத் தலைவனையே கலிங்கம் நோக்கி அனுப்புகிறான். அவன் கொடுத்த திட்டப்படி, தானத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தில் எண்மாய்க் கோட்டை என்ற புது முறைக் கோட்டையைக் கட்டுகிறான். கருணாகரனே

111