பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவர்கள். அவர் என்னுடைய வழிபாட்டுக்குரியவர். அன்னார் இதய அரங்கில் இதனை அரங்கேற்றிக் காணிக்கையாக்கி அஞ்சலி செய்கிறேன்,” என்று செப்பியிருக்கின்றார். பக்திக் கடன் இது!


பட்டப் பரீட்சைக்கு அமர்ந்தபோது, சோழர்களின் பொற்காலம்பற்றி ஒரு வினாவுக்கு விடை கொடுக்கும் நிலை வந்தது. படித்ததை வடித்தேன். உங்களுக்கு நினை விருக்கிறதா?-‘வரலாறு என்றால் புளுகுகளின் மூட்டை!’ என்று வாய்கொழுத்துச் சொன்னரே நெப்போலியன்? அப்படியென்றால், அவரை இன்றைய சரித்திரம் மறந்து விட்டதா? நெப்போலியனின் இதய மொழியை முன்னுரையாக்கி, அதன் பேரில், கேள்விக்கு விடைமாளிகை எழுப்பினேன்.

காலத்தின் நாட்குறிப்பு ஏடுதான் வரலாறு. அதனால் தான் ‘வரலாறு நடக்கிறது’ என்று சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். வரலாறு அவ்வாறு நடைபோடுவதால் தானே, நாம் இப்படி ஓர் அற்புதமான காட்சியைக் காண முடிகிறது?

அதோ, அந்தத் தலைநகர்தான் கங்கை கொண்ட சோழபுரம். சரித்திரம் புகலும் ஊர்; சரித்திரத்தைப் புகலும் நகரம். அன்று தேர்வலத் திருநாள். கலிங்கத்தை வெற்றி கொண்ட கோலமிகு திருவிழா நாள் அது. கலிங்கம் எறிந்த கருணாகரவேளுக்குப் புகழ் பாடிடக் கொடுக்கப்பட்ட நல்வாய்ப்புத் தவநாள் அது. வெற்றிகளும், அவ்வெற்றிகளை உருவாக்கும் அரசியல் நுணுக்கப் புத்திச் செறிவுக் கற்பனைகளும் வீரர்களின் உள்ளங்கை பாவைகள் அல்லவா? வீரன் ஒருவன்; அவன் வெற்றித் திருவுடன் விளையாடினான்; வெற்றித் திருவுக்கு

114