பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளையாட்டுக் காட்டினான். அதனால்தான் அவனுக்குச் செம்பியர்குலச் செம்மலாம் குலோத்துங்கச் சோழமாதேவர் தேரோட்டியானாரா? தோல்வியில் வெற்றி நாதம் இசைத்து, வேதனையிலே உற்சாகத்தைக் கைக்கொண்ட சாதாரணமான வீரன் ஒருவனா அவன்? வீரத்திற்குப் பருவ மாற்றங்கள் ஏது? அவன் கருவிலே திரு வாய்க்கப் பெற்றவன். அதனால்தான், சோழநாட்டின் பட்டமாதேவியின் உள்ளத்தைத் தொட அவனால் முடிந்தது. தொட்ட குறையும் விட்டகுறையும் மார்பொட்டி அணைந்தன. “...இன்று முதல் கருணாகரன் தத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மகன்!...” என்று ஆணையிடுகிறாள் மதுராந்தகி தேவியார்.

வரலாற்றைத் திகழவைத்த மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமானின் வாழ்க்கைச் சரித்திரத்தின் ஏடுகள் ஒவ்வொன்றும் சொல்லாமல் சொல்லும் சித்திர விசித்திரத் கதைகளை நீங்கள் அறிய வேண்டாமா?

‘செம்பியன் செல்வி’ என்ற இந்தக் கதையிலே இதயத்தை மகிழ்விக்கும்’ வர்ணனைகள், உள்ளத்தைத் திடுக்கிட வைக்கும் போர்க்காட்சிகள், உணர்ச்சியைக் கவரும் காதல்நிகழ்ச்சிகள், சுவையோடு செல்லும் நிகழ்ச்சிக் கோவை-இவை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன,” என்று திரு சோமு அவர்கள் போற்றுதல் அளிக்கிறார். அவர் சொல்வளப் பேரறிஞர்.

ஒரு காட்சி: காதற் காட்சி!

அழகின் பொற்பதுமை அவள்: சோழர் குலப்பூங் கொடி. அம்மங்கை என்பது அவள் பெயர். நீறு பூசும் தந்தையான திரிபுவன சக்கரவர்த்தி பிறமதங்களுக்கு

115