பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவற்றை அப்படி வீசி எறிந்துவிட்டீர்கள்? கதைக்குக் கால் இல்லை என்கிறார்கள். சுத்தப் பொய்.இப்படிபட்ட சரக்குகள் தாமே கால்களாகத் தொண்டு புரிகின்றன?

அழிந்த காலத்துக்குப் பிரதிநிதித்வம் ஏற்று, அழிந்த காலத்தை அழியாத வகையில் விளக்கிக் காட்டுபவன் சரித ஆசிரியன், 'அனுபவத்தினின்றும் எழுதவேண்டும்' என்பது நாவலலாசிரியனுக்கு இடப்பட்டுள்ள கட்டளை. இவ்விரண்டு குறிப்புக்களையும் கூட்டிக் குழைத்தால், சரித்திர நாவலாசிரியன் உருவாகிவிட முடியுமா? முடியும். ஏன், முடியாது?

நண்பர் திரு கோவி. மணிசேகரனின் 'செம்பியன் செல்வி'யில் சரித்திர ஆசிரியரின் குரல்(tone of a historian) கேட்கிறதா?

இதற்கு மறுமொழி: ‘ஆம்.’

சரி; வரலாறு சொல்லும் இந்த வரலாற்றுப் புதினத்தில் தலைமை உறுப்பினன் எனும் நாயகன் வேடத்தை யார் ஏற்கிறார்கள்? அவ்வேடம் புனைவடிவமா? உள்ளத்துடன் உண்மையிலேயே ஒன்றி, உள்ளத்தை இயக்கும் வேடமா அது? கதைத் தலைவி யார்?

சிந்தனக்குச் சூடு தரும் வினாக்கள் தாம் இவை. ஆனால், இந்தச் சரித்திரப் பெருங்கதைக்கு ஊட்டம் அளிக்கவல்ல உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் கலிங்கவேந்தன் அனந்தவர்மன் ஆகிய இருவேறு சக்திகளுக்கும் சொந்தமான படைஞர்களைத் தவிர்த்து இடைவெட்டிய பராக்கிரம பாண்டியன், காலிங்கராயர் போன்ற - (Characterless Characters), குணமிழந்த நபர்களையும்

117