பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சரித்திரம் என்பது காலத்தின் முத்திரைப் பதிவுத் தொகுப்பு. நவீனம் என்பது சமுதாயத்திற்காகப் பரிந்து பேச முயலும் கற்பனை மனத்தின் குரல் பதிவு. வரலாறும் புதினமும் ஒன்று சேரும்போது, சரித்திரத்தின் பங்கும், நவீனத்தின் கைவரிசையும் விகிதாசார நிர்ப்பந்தந்தில் கூடுதல்-குறைச்சலாகத் தெரியலாம். ஆக, வரலாற்றுப் புதினத்தைப் பொறுத்த அளவில், வரலாறு என்னும் மூக்கணாங் கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டால் தான், நாவல் எனும் தேர் சரளமாக ஓட முடியும்.

‘கலிங்கத்துப் பரணி’யில் வாழ்கிறான் கருணாகரன்.

‘முருகிச் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழன்மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ!’

‘கடை திறப்பு’க்குப் பின் ‘களம் பாடியது!’...

காவிய நாயகனும் கருணாகரனைச் சார்ந்தோடும் கதையில்தான் சுவை இருக்கிறது.

கி. பி. 1070. குலோத்துங்கர் பொன்னி சூழ் சோழ வள நாட்டின் தலைவரானர்.

கலிங்கன் அனந்தவர்மன் தவறாமல் கப்பம் கட்டி வந்தான். இருமுறை மறுத்துவிட்டான். பரணிக்கு அமைந்த கரு இங்கேயும் தொடர்கிறது. காலதேவப் புலவர், தம்மை இகழ்ந்த கலிங்கவேந்தனுக்குப் பாடம் கற்பிக்க விழைந்தார். அவரது விழைவும் அறிஞர் தம்பிரானின் ஆத்திரமும் தேவியாரின் மனக்கனவும் முக்கூட்டு ஒப்பந்தம் அமைக்கின்றன. கருணாகரனை ஏவுகின்றார் குலோத்துங்கனர். கலிங்கத்தில் எண்வாய்க் கோட்டை சமைக்கிறான் (கருணாகரனது வாய்மொழியை

121

அ-8