பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்பி அவ்வளவு சுளுவாக எதிரியின் கூடாரத்தில் அவனுக்கு எப்படி இடம் கிடைத்தது போன்ற குறுக்குக் கேள்விகளை அனுமதிப்பதற்கில்லை.) அருள்மொழி கிடைக்கிறாள். பூபதியின் ஓலை மாற்று விளையாட்டுக்குப் பிறகு, கருணாகரன் தப்புகின்றான் அருள்மொழி தானே திறைப்பொருளாகி இசைமன்னனிடம் வருகிறாள். அவரது இசையாகிறாள். மீண்டும் சூழ்ச்சிகள். புனைவடிவங்களும், சுரங்கப் பாதைகளும் இருட்டில் மறையும் கரிய உருவங்களும் ஏராளம்...! கடைசியில், செம்பியர் செம்மலின் கருத்துப்படியே கலிங்கனைத் தேர்க்காலில் கட்டி இழுத்துவருகிறான் கருணாகரன். மாதண்டநாயகருக்குச் செம்பியன் செல்வி கிட்டுகிறாள்.

சோழப் பேரரசருள் முதல் இராஜ இராஜனே (கி. பி. 985-1014) சிறந்த அரசியல் பேரறிஞனாகத் திகழ்ந்தான். இக்கால அரசியலுக்குப் பொருந்தியும் உயர்ந்தும் விளங்குகின்ற வகையில் அவன் அரசியல் மேதையாகத் திகழ்ந்தான் என்பதற்கு திரு மா. இராச மாணிக்கனார், திரு பண்டாரத்தார் ஆகியோரின் ஆராய்ச்சிகள் சான்று பகருகின்றன. அவனது வாழ்வும் ஆட்சியுமே சோழமண்டலத்திற்கு வாய்த்த ஒரு பொற்காலமாகும். அவனது ஆட்சித் திறன், அவனுக்குப் பின்னர் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள்வரை ஆண்ட சோழர்களுக்கு அடித்தளமாக அமைந்திருந்ததென்பதையும் திரு. சாஸ்திரியார் அழுத்தமாய்க் கூறியுள்ளார்.

இராஜ ராஜ சோழன். அவனுக்குப் பின், முதலாம் இராஜேந்திரன் (1013-104). இவன் வடவேந்தர்களை முறியடித்து, கங்கை ஆறு வரை சென்று போர்த் திறன்

122