பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இப்போதாவது என்னை நம்புகிறீர்களா?” என்று கேட்டாள் சிந்தாமணி அவள் குரல் தழுதழுத்தது.

“நம்புகிறேன் சிந்தாமணி, என்னை மன்னித்துவிடு!” என்று அழுதான் அழகு-அமுகப்பன்.

“அப்படியானால், இப்போதே நமது திருமணம் நடை பெற்றாக வேண்டும்!”-சிந்தாமணி தேம்பியவாறு கூறினாள்.

அழகு தன் மோதிரத்தைக் கழற்றி அவள் கையில் அணிவித்தான். இருவரும் ஒருவரையொருவர் புன்னகை தவழப் பார்த்தனர். .

அழகப்பன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் தடாலெனத் தரையில் சாய்ந்தாள்.

“ஒரு நாள். வெள்ளிக்கிழமை...உங்களுடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்தேன். இன்றுகூட வெள்ளிக்கிழமைதான். அந்த ஆவல் பூர்த்தியாயிற்று!” என்றபடி அவன் முகத்தில் ஒரு முத்தம் இட்டாள் சிந்தாமணி. பிறகு அவள் கண்விழிக்கவில்லை.

நஞ்சை உண்ணக் கொடுத்து விட்டார்கள்!
பாவம் அந்தோ, பரிதாபம்!

சிந்தாமணி, உன்னைக் கெட்டிக்காரி என்று நினைத்தேனே? பகுத்தறியும் பண்புகொண்டவள் என்று எண்ணமிட்டேனே? ஆண்டாளின் திருப்பாவைப் பாட்டை முழுமையாகப் படித்து உட்பொருளை மனத்தில் வாங்கிக்கொள்ளாமல், ‘கொங்கை’ என்ற ஒரு சொல்லை வைத்து விகாரமான பாட்டென்று முடிவுகட்டியபோதே நினைத்தேன், நீ அவசரக்காரி என்று. நீ நெஞ்சுரத்தை வளர்த்துக்கொண்டிருந்தால், தொடக்கத்திலேயே

148