பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டால், அவள் அழகான கரங்களால் என் சமாதிக்கு மலர் தூவட்டும். இது ஒரு வெறுங் கனவு என்பது எனக்குத் தெரியும். அவளாவது அழுக்கற்றவள் என்று நிரூபிக்கப் படவாவது! பாவி, பாதகி, என் குடும்பத்தைக் கெடுத்த குடிகேடி!’

தந்தைக்கும் மகளுக்கும் ‘பண்புப் பாலம்’ அமைத்துக் கொடுத்து வேடிக்கை பார்க்கும் இக்கோலத்திற்குப் பெயர் என்ன சூட்டலாம்?

❖❖❖

பெண்கள் வெறும் போகப் பொருள்களாகக் கூடாது; புது உலகை உருவாக்கும் சக்தி பெற்றவர்களாகவும் இயங்க வேண்டும்; இலங்க வேண்டும். மேதைகளின் வழி மிதிப்பவர் ஒவ்வொருவரும் காணும் நற்கனவு இது. இந்தக் கனவை ‘வெள்ளிக்கிழமை’ பலிக்கச் செய்ததா? வெள்ளிக்கிழமை என்னும் தலைப்புச் சூட்டப் பெறாமலிருந்திருந்தால், ஒருவேளை அக்கனவு ஓரளவாவது வெற்றி கண்டிருக்கக் கூடும் போலும்!

தண்ணிரில் கலந்த எண்ணெய் போன்று உருவாகியுள்ள நிகழ்ச்சித் துணுக்குகள், இப்புதினத்தின் உறுப்பினர்களிலே ஒருவரையேனும் காப்பாற்ற வலுவின்றி நிற்கின்றன.

அழகப்பனும், சிந்தாமணியும் பாத்திர அமைப்பின் பண்பிழந்த பாத்திரங்களாகவே (Characterless characters) பிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘...தனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் வரவேண்டும் என்று சிந்தாமணியால் விடை காண முடியவில்லை. பூர்வ ஜன்ம பூஜாபலன் என்பார்கள் புத்தியைத் திட்ட

153

அ-10