பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூடு பாய்ந்து, கருத்துரைகளைப் பாய்ச்சி, இலக்கிய உலகத்தின் ஒப்புயர்வற்ற ‘இரண்டாவது இங்கர்சாலாக’ அறிமுகமாயிருக்கக் கூடுமே?...கெடுத்து விட்டார்கள்!

நாடகமுறை அமைப்புகளுடன் (dramatic method) நடமாடுகின்ற டைகர், நயினா, சிந்தாமணி, அழகப்பன், சிவநேசர் போன்றோர் இயல்பு பிறழ்ந்த இயல்புடைய (abnormal characters) உறுப்பினர்கள் போல மயக்கம் தருகின்றனர்; ‘வாழ்க்கை துன்பமயம்’ என்ற புத்தமக் கொள்கைதான் இறுதியில் எஞ்சுகிறது. இவர்கள் மூலமாக, நம் திருநாடு பயனுற, நம் மனம் விரிவுபெற, நம் வாழ்வு வளம் அடைய வழி உண்டா?

மேதை ஆர்னால்டு சொல்லுகிறார்: ‘உயிர் வாழ்வுக்கு வேண்டிய நல்லொழுக்கத்திற்கு மாறாக எழும் எந்த எழுத்தும் இலக்கியமாகாது!’

அறிவுக்குப் பொருத்தமற்ற நிகழ்ச்சிகளை (irrational elements) இந்நவீனத்தில் படிக்கும்போது, ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஒம்புமின்!’ என்ற ‘புறம்’தான் நினைவில் தோன்றுகிறது. .

‘வெள்ளிக்கிழமை’ முடிவுகட்டிச் சொல்லும் ‘படிப்பினைத் தீர்ப்பு’ (moral judgement) என்ன?

மறுமொழி: மெளனம்!

மனச்சான்று இழந்த ‘வெள்ளிக்கிழமை’க்கு தமிழ்ப் புதின இலக்கிய வரலாற்றில் கொடுக்கட வேண்டிய ‘இலக்கிய அந்தஸ்து’ யாது? -

மறுமொழி: மெளனம்!

155