பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திரு அகிலன் அவர்கள் என்னுள்-அதாவது, என் இலக்கிய மனத்துள் சன்னக் குரலெடுத்துக் கூறுகிறார்; அந்தக் குரலை என்னுடைய மனக்கண் படிக்கிறது. “உமா வாழப் பிறந்தவள்!”

நான் உமாவை மீண்டும் எடை போட முயற்சி செய்கிறேன். பாவை விளக்கின் உயிர் ஒளி இழை இழையாகப் பரவத் தொடங்குகிறது. என்ன நானே எண்ணி நிறுவை செய்து கொள்ளவும் அந்த ஒளி கைகொடுக்கிறது.

பொதுக் குரல்கள் சில என் காதுகளில் வந்து விழுகின்றன: “பாவை விளக்கு மிக அற்புதம்! ... படமாகிறது!... அகிலனை சிரஞ்சீவியாக்குவது இது ஒன்றுதான்! உமாவை என்னால் மறக்கவே முடியவில்லை...!”

பேராசிரியர் திரு அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் ‘திரு அகிலன் இத்தகைய அழியாப் படைப்புகள் பலவற்றைப் படைத்து உலவவிட இறைவன் அருள் புரிவானாக!’ என்று வாழ்துகிறார்.

இலக்கிய ஆடுகளம் சிந்திக்கத் தலைப்படுகிறது;


இதோ, கண்ணபுரம்!

கண்ணபுரத்தை உங்களுக்குத் தெரியுமா?...என்ன, அப்படி விழித்துப் பார்க்கிறீர்களே?...ஐயா, தயவு செய்து உங்கள் கையிலுள்ள நாட்டுப் படத்தைத் தார வைத்து விடுங்கள். ஏனென்றால், உங்கள் ஊனக் கண்களுக்கு அந்த ஊர் புலப்படாது. எனக்கு மட்டும் அவ்வூர்

161