பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சியளித்து விட்டதா என்று சிந்திக்கின்றீர்களா? ஆம்; தெரிந்தது, புதுக்கோட்டை என்னும் ‘தனியரசு’ தெரிந்தது; அந்தப் புதுக்கோட்டையில்தான் இப் பொழுது கண்ணபுரம் நிழலாடுகிறது. வேடிக்கையாகத் தோன்றுகிறதல்லவா?

வேடிக்கைதான்!

மேலைநாட்டு இலக்கிய மேதை ஸாமர்ஸ்ட் மாம் (Somerset Maugham) ஓர் இலக்கியத் திறனாய்வு நூலை வெளியிட்டிருக்கிறார். உலகத்துச் சிறந்த நவீனங்களை ஓரிடத்தில் சந்திக்க வைத்தார்; பிறகு தம்முடைய இலக்கிய மனம் தீர்ப்பளித்த பத்தே பத்து நவீனங்களை மட்டும் பொறுக்கியெடுத்து, விரிவான ஆராய்ச்சி நடத்துகிறார். அத்தகைய புதுமை நோக்கைத்தான் நாம் மேற்கண்ட நூலில் காண்கிறோம். கதை நிகழுகின்ற இடம், காலம், சூழல் ஆகிய அமைப்பு முறைகளைப் பற்றி (Novel Setting) அழுந்தக் கூறுகிறார். பெருங்கதைக்குப் பொறுக்கியெடுக்கும் ஊர், நகரங்களை முதன் முதலில் நேரில் போய்ப் பார்த்து அப்படி அப்படியே குறிப்பெடுத்துக் கொள்வாராம் அவர். இதுவே மேலை நாடுகளின் இலக்கிய மேதைகளிடையே பரவிவரும் பரம்பரைப் பழக்கமாகும். ஏன், நம்முடைய தவச் செல்வர் திரு கல்கி அவர்கள் சரித்திரப் பிரசித்திபெற்ற எல்லாப் பகுதிகளுக்கும் நேரில் சென்று, அதன்பின் சரித்திரத்தைப் பேச வைக்கவில்லையா? இதே முறை, சமுதாய அடிப்படை கொண்ட புதினங்களுக்கும் விலக்கல்லவே!

‘ஆக, ‘பாவை விளக்கு’ சம்பந்தப்பட்ட மட்டில், கண்ணபுரம் என்பது சமஸ்தானம்; அதாவது, தனியரசு. அது எப்படிக் கற்பனைப் பெயரோ அதுபோலவேதான்,

162