பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்டாகிறது. தற்காலிகமான இம் மாறுதலைத்தான் பெளதிக மாற்றம் (Physical change) என்கிறார்கள். இப்படிப்பட்ட பெளதிக மாற்றம் நம் தணிகாசலத்துக்கு ஒரு முறையல்ல, ஒன்பதாயிரம் முறைகள் ஏற்படுகிறது. ஆனால், பெண் ஒருத்தி தணிகாசலம் முகம் நோக்கி முகம் அமைத்துச் சொல்கிறாள்: “...அறியப் பிள்ளை என்ற ஒருவனும் அறிந்த மனிதன் என்ற மற்றொருவனும் ஆக இரண்டு பேர் சேர்ந்தவன் நீ!”

யார் இப்படிச் சொன்னார்கள்? சொன்ன உருவம் உங்களுக்குப் பழக்கப்பட்டதுதான். ஆனால் அந்த ‘உள்ளம்’ அன்று காட்சி கொடுத்ததைவிட இன்று அதிகமான எழிலுடன் எனக்குக் காட்சி தருகின்றது. அந்த உள்ளமும் உருவமும் யாருக்குச் சொந்தம்? அது: தேவகி. அவள் தேவகி. அவை: தேவகி!


புதிர் எனும் தேவகி

தேவகி...!’

தமிழ்ச் சாதிக்குக் கறையாக அமையாமல், கரையாக அமைந்து, பாலம் கட்டி நிற்கும் பெண்கள் பலர் வரலாற்றில் வாழ்கிறார்கள்; ஒத்த காலத்தில் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். இத்தகைய பட்டியலுக்குப் பயன் தர முடியாவிட்டாலும், பலம் தரக்கூடிய பெண் தேவகி கற்பனைப் பெண், அதாவது, கற்பனையில் வாழ்பவள்: இதயத்தால் வாழத் தெரிந்தவள். புருவமையம், நெற்றிமேடு, நேர்வகிடு ஆகிய இம்மூன்றும் தணிகாசலத்திற்கு மூன்று புள்ளிகள் உருவாக்கிக் கொடுத்த வட்டம் தேவகிக்கு மட்டுமல்ல, தணிகாசலத்திற்கும் சொந்தம். இந்த உரிமை

165