பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பார்க்கிலும், உங்கள் எல்லோரையும் விட நான்தான் மிகுதியாகக் குழப்பமடைகிறேன். “சொல்லுங்கள், மாமா! நானும் ஆண்டாளும் ஒன்றுதானே?” என்ற உமாவின் வினா, மழையையும் இடியையும் எழுப்புகிறது. தணிகாசலத்தின் எழுத்துத் துறையில் உமா கொண்டு வந்த சீதனமான பாவை விளக்கு சுடர் விடுகிறது; கண்ணீர்மடை திறக்கிறது. “என் உயிர் வெறுங் காற்றுடன் கலக்கக் கூடாது. அது உங்கள் உயிர்க் காற்றுடன் கலக்க வேண்டும்!” என்ற உமாவின் வேண்டுகோள் எதிரொலிக்கக் கேட்கிறேன். அவனுக்கு ஒளி கொடுத்தவள் இருளில் தடுமாறுகிறாளே?...அவனுடைய மனப்பசிக்கு அவளது உயிர்ப்பசி உள்ளடங்க வேண்டுமென்பது என்ன நியதி?

ஆமாம்; கதாநாயகி யார்?

உமாவா?

பிறந்த கண்ணிர் களி துலங்கச் சிரிக்கிறது; காண்கிறேன். அந்தக் கண்ணீர்ச் சிரிப்பில் ஒரு முகம் தெரிகிறது. அந்த முகத்திற்குத் திலகம் தந்தவன் சென்னைக் கடலில் ஐக்கியமாகி விட்டானாம்! மீண்டும் பார்க்கிறேன். பார்த்த முகத்தில் பழைய ‘வெறுமை’யே விளையாடுகிறது. இப்போது நாவலாசிரியர் திரு அகிலனை என்னால் போற்ற முடிகிறதா?... யோசிப்போம்!

தேவகிதான் நான் தேர்ந்தெடுக்கும் கதாநாயகி!

நான் தணிகாசலத்தைக் கூர்த்தமதி பதித்து நோக்குகின்றேன். சந்தனமென்று நீங்கள் நினைத்த சிறு துரும்பு தன் ஆத்மாவையும் மரணத்தையும் இந்த வரிகளில் வடித்துவிட்டது. இனிமேல் நான் மணமற்ற மரத்துண்டு. என்னுடைய தோல்விக்கு மட்டும் நீங்கள் காரணமென்று

168