பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இத்தகைய மாயப் பிரபஞ்ச வாழ்வில்தான், ஆண்டாளால் கண்ணனைக் காதலிக்க முடிந்தது. காதலிக்கத் தெரிந்தது. அவள் பாக்கியவதி. சூடிக் கொடுத்த நாச்சியாரானாள்.

உமா தெய்வப் பெண் அல்லள்; என்றாலும் அவளும் ஆண்டாள் மாதிரி ஒரு தெய்வத்தின் மீது காதல் கொண்டாள். ஆனால் இந்தத் தெய்வம் ஓர் ‘அப்பாவித் தெய்வம்.’ உமாவின் சிறிய தாயாரான சந்திரலேகாவிடம் தணிகாசலம் விழிப்பதைப் பாருங்களேன்!

“உமாவின் பேச்சும் சிரிப்பும் பார்வையும் உங்கள் கற்பனைகளைத் தூண்டவில்லையா? அவளை அடைய வேண்டுமென்று-உங்களுக்கு அவளைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்ட தில்லையா?”

“ஆசையில் பல விதங்களுண்டு. எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களுக்கு நான் அவ்வளாக ஆசைப்படுவதில்லை. எனக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக இருந்தாலும், உமா மிக உயர்ந்த பொருளாக இருந்தாள்.”

உமா சாதாரணப் பெண்தானே என்று வினவுகிறாள் சந்திரலேகா.

“அவள் சந்தன மரமென்பது எனக்குத் தெரியும், தெய்வமென்று என்னை நம்பி, அவளுக்காக என்னைத் தெய்வமாகவே நடிக்கச் செய்துவிட்டாள். எனக்குள்ளே இருந்த சிறுமையும் வெறியும் வெளிப்பட்டிருந்தால், என்றைக்கோ அவள் என்னைக் காறி உமிழ்ந்துவிட்டு ஓடியிருப்பாள்!” என்று பதில் கொடுக்கிறான் தணிகாசலம். இவனை ஓர் ‘அப்பாவித் தெய்வம்’ என்றேனே, சரிதான்; சரிதான்! அவனுக்குள்ளே இருந்த அந்தச்

172