பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘சிறுமை’க்கும் ‘வெறி’க்கும் உதாரணம் வேண்டாமா? எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களில் ஆசை வைக்காத தணிகாசலம், அன்றைய சூழலில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக நிலவிய செங்கமலத்திடம் பழகிய எண்ணத்தை நெஞ்சில் சுமந்துதான் அவன் தனக்குத் தானே பழி சுமத்திக் கொண்டானா? தேவகிக்கும் தணிகாசலத்துக்கும் நடைபெற்று முடிந்து ஓய்ந்த புயலுக்குப் பின், அன்றிரவு மூன்று மணிக்கு தேவகியை நாடிச் செல்லும் அளவுக்கு தன்னுடைய மனம் பலங் கெட்டுப் போனதை ‘வெறி’ என்று குறிப்பிடாமல், வேறு எச் சொல்லால் சுட்டிக் காட்டுவான்?

தணிகாசலம் யார்? சர்வ சாதாரணமான ஒரு மனிதப் பிராணி. பேனா பிடிக்கும் நேரத்தில் மட்டுமே அவன் ஒரு மனிதன். மனிதன் என்றால், மிக மிகச் சாதாரணப் புள்ளி. மனிதனுக்கு இம்மாதிரி குணங்கள் தாம் இருக்க வேண்டுமென்று எல்லைக் கோடு எழுதி வைத்திருக்கின்ற இயற்கையின் நியதிப் போக்குக்கு, யதார்த்தமாக அமையும் மனித வாழ்வுக்கு, உருவான காதல் லீலைகளுக்கு, உருவாக்கிக் கண்ட தாம்பத்தியத்திற்கு அனுசரணையாக, அனுமானமாக, உதாரணப் பிரதிநிதியாக அவன் தன்னை, அமைத்துக் கொண்டான். அவன் அமைந்தான? அவன் அமைந்திருந்தால், அவனுக்கு அபலைப் பெண் கெளரி மாத்திரம் தானே கிட்டியிருக்க வேண்டும் பரபரப்பையூட்டும் அழகு வாய்ந்த தேவகியோ, தியானத்தில் அமரும் கன்னித் தெய்வமெனத் தோன்றிய உமாவோ அவன் வாழ்வில் குறுக்கிட யார் காரணம்? அவன்தான்! இந்த நிலைக்களன் தான் தணிகாசலத்தை அரைகுறைப் படைப்பாகவும் நிறைபெறாத மனிதனாகவும் (undeveloped and unfinished character) ஆக்கித் தொலைத்திருக்கிறது. ‘என்

173