பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருதயம் இலக்கியத்துக்கு; என் உடல் தாய்த் திருநாட்டுக்கு!” என்று இந்தக் ‘குயில்’ கூவியது. நடிப்பு...!


வட்டிச் சோறு

இலக்கியத் திறனாய்வுக் கலையில் வல்லமையும் வளப்பமும் கொண்டவர் திரு அ. ச. ஞா. அவர்கள். அவர் தம் முகவுரையில், “தணிகாசலத்தின் மனைவி கெளரி ஒரு தனிச் சிறப்புடன் விளங்குகிறாள். வட்டிச் சோற்றைப் பங்கிட்டாலும், வாழ்க்கையைப் பங்கிட மாட்டாள் பெண் என்பது பழமொழி. எனினும், கெளரி மனம் ஒப்பித் தன் வாழ்க்கையைப் பங்கிட முனைகிறாள்!” என்று எடுத்துரைக்கிறார். பொதுமை நோக்கில் பெண் ஆணுக்கெனத் தமிழ் மண்ணில் பெருமைகள் பல சொல்லப் பட்டிருக்கின்றன. ஆனால், புதுமை நோக்கில் அவற்றை அழித்தெழுத முயற்சிகள் பல நடைபெற்று வருகின்றன. இவ்விரண்டு வரம்புகளுக்கும் ஊடாக நின்று கெளரியைச் சக்தித்து, அறிமுகம் ஆகி, அவளும் அவள் கணவன் தணிகாசலமும் நடத்தி வந்த இல்லறத்தைப் பார்த்துக் கொண்டே வந்த எனக்கு கெளரி புதுமை காட்டித் திகழ்ந்தாளே தவிர, புதுமைப் பெண்ணாக என் முன் தோற்றம் தரவில்லை. உமா கொடுத்த படத்திலிருந்த வள்ளி-தெய்வயானையின் வாழ்வு வல்லவேல் முருகனுக்குப் பங்கிடப்பட்டிருக்கலாம். விந்தை ஏதும் காத்திருப்பதற்கில்லை. ஏனெனில், அவர்கள் மானிடர்களின் நெஞ்சங்களில் மட்டிலுமே வாழ்ந்தவர்கள். தன் வாழ்க்கையைக் கூறுபோட்டுப் பகிர்ந்தளித்தாள் கெளரி. பண்பு, பரிபக்குவம்,துணிச்சல், தியாகம்-இத்தகைய விலையுயர்ந்த குணநலன்களுக்கு உள்ளே கெளரி கூடாரம் அமைத்துக்

174