பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடுக்கப் படுகின்றாள். அவள் கூடாரத்தை விட்டு விலகி வெளியே தலை நீட்டும்போது, அவளிடம் எந்தத் தனித்தன்மையை நான் காண முடிந்தது? நெடுமூச்சுத் தான் வருகிறது. காரணம், கெளரியை இதய பூர்வமாகவோ, விரிந்த அளவிலோ, அன்றி, சாங்கோபாங்கமாகவோ என்னால் படிக்கமுடியவில்லை. ஏன், தணிகாசலமாவது அவளை முழுமையாகப் படித்து வைத்திருக்தானா? என்னால் நம்ப முடியவில்லை.

நம் தணிகாசலம் பெயர் பெற்று விளங்கிய எழுத்தாளனாக இருந்துங்கூட, அவனால் அவனேயே உணரக் கொடுத்து வைக்கவில்லை. கிடைத்த அறிவு நூல்களின் இடைவெளியிலே ‘குடியிருந்த’ அவனுள்ளே நிலவிய ‘இரண்டு மனிதர்கள்’ என்றாவது ஒரு நாள் சந்தித்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? ஊஹூம்!

‘நானும் கண்ணனும் ஒன்றாக முடியுமா?’ என்று திணறியவனுக்கு உமா ‘இரண்டாவது மனைவி’யாகிறாள். பயப்படாதீர்கள். இருதாரச் சட்டம் அப்போது அமலில் இல்லை!

‘நீ என்னைக் காதலிக்கிறாயா?’ என்று தணிகாசலத்கைக் கேள்விக் கேட்கத் தூண்டிய பெருமை கார்த்திகை மைந்தனுக்கே உரிமை. ‘நான் உங்களைக் காதலிக்கிறேன்!’ என்று சொல்லாமல் சொல்லிவந்த மாற்றம் மேதை பிளாட்டோவுக்குத்தான் சொந்தம். ‘நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’ என்று நூதனமான வினாவைச் சொடுக்கிய பெருமை உமாவின் ‘கன்னி மனம்’ அடையத்தக்க பெருமை. “ஏசுநாதரை நினைப்பதற்கு முன்னால் நீ என்ன மறக்கக் கற்றுக்கொள்!” என்று உபதேசம் செய்த ‘குருநாதரே’ பின்னர் ஒரு நாளிலே “நான் உன்

175