பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

னைக் காதலிக்கிறேன்!” என்று மெய்ம்மறந்து பேசும் ‘பவித்திரப் பண்பு’ தணிகாசலத்துக்கே ‘உரிமை பதிவு பெற்றது’ ஆகும்!

உழைப்பை, பாசத்தை, அன்பை எடுத்துக்கொண்ட உமாவை நடைப் பிணமாக்கிய பிறகு தணிகாசலம் தன்னுடைய ‘அனுபவிக்கப்பட்ட வாழ்வை’ப் பகிர்ந்து கொடுக்கிறான். அவனை மூன்று சந்தர்ப்பங்களில் தொட்ட தணிகாசலம், நான்காம் முறையாகவும் தொட்டான்!

“உமா தன்னுடைய மனத்துக்குள் உங்களை வைத்துப் பூசைசெய்து கொண்டிருக்கிறாள். இனிமேல் வேறு ஒருவருடன் எப்படி அவளால் வாழமுடியும்? அவள் தன்னையும் என்னையும் ஒன்றாகவே நினைத்துப் பேசுகிருள்!” என்று ‘ஆறுதல்’ மொழிந்தாள் வாயில்லாப் பூச்சியான கெளரி. இந்த ஆறுதல்தான் தணிகாசலத்துக்குத் தென்பை ஊட்டியிருக்க வேண்டுமோ, என்னவோ..?

“ஏன் மாமா, நான் உங்களுடைய மனைவிதானே?” என்று தணிகாசலத்தின் ‘புதுமனைவி’ உமா கேட்கிறாள். இந்த ஒரு கேள்வி என் கண்களைக் கலங்கச் செய்தது. எனக்குத் தணிகாசலத்தின் பேரில் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. ‘நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’ என்று ‘புறம்’ தோற்றுவித்த பாணியில் உமா எதிர்க் கேள்வி கேட்டதற்கப்பால்தான், அவன் தன் உள்ளத்தை வெளித்திறந்து காட்டுகிறான்! காலங்கடந்த ‘அவதாரம்’ இது. அவனுக்கு ஏற்பட்ட மனமாற்றம் இயற்கையுடன் ஒன்றவில்லை. அதனால்தான். அவனுடன் வாழ விழையாமல் அந்தப் பஞ்சவர்ணக் கிளி பறந்துவிட்டதா?

176