பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பறித்தெடுத்துக் கொண்டு, தெய்வ மங்கையாகிவிட்டாள்! அவன், சாதாரணமான ஜடம்! பாவம், வெறும் ஐடம்!


பூவை விளக்கு

உயர்திரு அகிலன் அவர்கள் சந்தித்த பின் தணிகாசலத்தை நான் பழக்கப்படுத்திக் கொண்டேன். வழிந்த கண்ணீரை வழித்துவிட உரிமை பூண்ட கெளரி கல்லாய்ச் சமைந்து நின்றாள்; அந்த உரிமையின் மறுபாதியாகி, அவரது இனிய பாதியாகி ‘தற்காலிகப் பதவி’ தாங்கிய உமா பாவை விளக்கானாள். பாவை விளக்கையும் பூவை விளக்கையும் மாறி மாறிப் பார்த்து முடிந்ததும், ஆயிரத்தெட்டாவது தடவையாக தணிகாசலத்தைப் பார்வையிட்டேன். திரு. அகிலன் அவர்களின் பூரணமான ‘கருணை’க்கு இலக்கான கெளரி அவரது பரிபூரணமான அனுதாபத்துக்கு ஆளாகவில்லை. உமாவுக்குப் பின் கெளரியின் தியாகத்தின் விளைவாக, தணிகாசலம்-கெளரியின் தாம்பத்தியப் பிணைப்பில் ‘இறுக்கம்’ காட்ட புதியதொரு ஏடு காத்திருக்கிறதே? கெளரியின் அன்பு மனத்தை இன்னும் தெளிவாக உணர்ந்தறிந்து, அதன் மூலமாகக் கெளரிக்கு தணிகாசலத்தின் நெஞ்சில் நிரந்தரமான இடம் அருள மனமிரங்கியிருக்கலாகாதா? இந்த ஓர் இடைவெளி நிறைவு பெற்றிருந்தால், தணிகாசலத்தின் பாத்திரப் படைப்பு கட்டாயம் முழுமை பெற்றிருக்கும்


ஆசையின் பிழையாம்...!

ஆயிரக் கணக்கான வாசகர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து கதை சொல்லப் பழகியவர் நாவலாசிரியர்

178