பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகிலன். வாசகர்களுக்காக அவரால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் உமாவும் செங்கமலமும், அவர் தமக்காகப் படைத்துக் கொண்ட உருவம் தணிகாசலம். எனக்காக உருவான குணச் சித்திரம் தேவகி.

தேவகி தணிகாசலத்திற்கு ஒளி காட்டிய தெய்வமாகவே ஆகிவிட்டாள். மனித மனத்தின் பலங்கெட்ட உணர்ச்சித் தாக்குதல்கள் விளையாட முயற்சி செய்யும் தருணம். இளம் விதவையான தேவகியின் அறியாத் தனம் தணிகாசலத்தின் சலனம் கொண்ட உள்ளத்துடன் மோதுகிறது. உடலுறவு எட்டாத நிலையில் விதவைக் கோலம் ஏந்தும் விதி வாய்த்த தேவகிக்கு தணிகாசலம் சலனம் விளைவித்தது இயற்கை. ‘நான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள நினைப்பது நியாயந்தானா?’ என்று கேட்கும் தேவகியின் ‘இயற்கையான ஆசை’யை- ‘ஆசையின் பிழை’யைக் கேட்க எனக்குச் சுவையாக இருந்தது: அவனுடைய மனத்தைத் திறந்து பார்த்த தேவகி அங்கு கெளரியைக் கண்டதும், அவனது முழங்காலில் முகத்தைப் புதைத்துக்கொள்ளும் துணிவு பெற்றிருந்ததால் விலகிக்கொள்கிருள். “என்னுடைய குறையையெல்லாம் போக்கிவிட்டாய். என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷமாக நான் என்றைக்குமே இருந்ததில்லை!” என்று உணர்ந்து பேசுகிறாள். அவள் கனவும் கதையும் இத்துடன் முடிவடைகின்றன.

ஆனால், ‘குழந்தைத்தனம்’ கொண்டவன் தணிகாசலம் அடங்கிக் கிடந்த இனக் கவர்ச்சி நினைவுகள் தூண்டிவிடப்பட்டிருந்த நிலையிலே தணிகாசலம் விலங்காக முயன்று, முடியாமல், பிறகு மனிதனாகி விடுகிறான். வெறும் ஏடுகளை நம்பி ‘பகுத்தறிவு வாதத்தை’ கைப்-

179